போலிங் பூத்தில் பாரதியார்



போலிங் பூத்தில் பாரதியார்

+++++++++++++++++++++++
Mohamed Nizous



மொபைல் போண் கூடாது பாபா- நீ
முகத்தை  காட்ட வேணும் ராத்தா
துபாய்ல  இருக்கின்ற ஆளின்
துண்டில் நீ போடாதே பாபா.



வாக்களிக்க மட்டுந்தான் பாபா- நீ
வந்து போக முடியுமிங்கு பாபா
ஆட்களச் சேர்த்து கிட்டு அங்க
ஆட்டம் போட்டா மட்டிக்குவாய் பாபா



கள்ள வோட் போடாதே பாபா-உன்ன
உள்ள போட்டு உதைப்பான்கள் பாபா
துள்ளிய மாடு பொதி சுமக்கும் பாபா
நல்ல படி நடந்துக்க பாபா



அடையாள அட்டை வேணும் பாபா- அடுத்தவனின்
ஐடெண்டி கார்ட் காட்டல் குற்றம்
மடியில வெப்பன் இருந்தா பாபா-உன்னை
நொடியில பிடிப்பாங்க பாபா



பெயரில பிழை இருந்தா பாபா- பூத்
பெரியவரு முடிவு செய்வார் பாபா
பயரிங் ஓடர் குடுத்திருக்கு பாபா
பார்த்துக் கேட்டு நடந்துக்கிங்க பாபா



மைய அழிச்சுப் போட்டு பாபா
மறுபடியும் உள்ள போனால் பாபா
கையும் மெய்யுமாய் மாட்டிக் கொள்வாய் பாபா
பொய் வோட்டு புடி பட்டிடும் பாபா



ஆண்டவன் நாடியவர்க்கே பாபா
அதிகாரம் கையில் வரும் பாபா
வேண்டாத வேலை தவிர் பாபா
வெற்றி தோல்வி இறை நாட்டம் பாபா


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -