கல்வியியலாளர் சேவைக்கு தெரிவான மாளிகைக்காடு அஸ்வருக்கு பாடசாலை சமூகம் கௌரவமளிப்பு



நூருல் ஹுதா உமர்-
ல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை)யில் ஆசிரியராக கடமையாற்றி இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ள குடியியற் கல்வி பாட ஆசிரியரும், சமூக விஞ்ஞான பாடத்திற்கான இணைப்பாளருமாகிய எம்.ஏ. அஸ்வர் அவர்களை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (30) சமூக விஞ்ஞான பாட ஆசிரியர்கள் ஏற்பாட்டில் கல்லூரி முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் (SLEAS) தலைமையில் அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அதிபர், பிரதி உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் எம்.ஏ. அஸ்வர் ஆசிரியர் கடந்து வந்த பாடசாலை வாழ்க்கையின் இனிமையான நினைவலைகள் பகிர்ந்து கொண்டதுடன் வாழ்த்துக்கள் மற்றும் கருத்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.

இந்த கல்லூரியில் எம்.ஏ. அஸ்வர் அவர்களின் மூன்று வருட கால ஆசிரியர், சமூக விஞ்ஞான பாட இணைப்பாளர் சேவையை பாராட்டி கெளரவிக்கப்பட்டது டன் சமூக விஞ்ஞான பாட குழுவின் சார்பாக பொன்னாடை போற்றி நினைவு பரிசில் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதி அதிபர்களான ஹாஜியானி எஸ்.எஸ்.எம். சமதா மசூது லெவ்வை, உதவி அதிபர்களான எம்.எஸ் மனூனா, என்.டி நதீகா, சமூக விஞ்ஞான பாட ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :