“இலங்கையின் கல்வி முறைமை”


தொகுப்பு : ஸிப்னாஸ் ஹாமி

கேள்வி : சகோதரர் ஒருவரால் கேட்கப்பட்ட “இலங்கையின் கல்வி முறைமை” என்பதற்கிணங்க இக்கட்டுரையானது 2018.05.17ம் திகதி தொகுக்கப்பட்டது.

பதில் : கல்வி வழங்கப்படும் நோக்கங்கள் மற்றும் அது வழங்கப்படும் நிறுவனம் மற்றும் நிறுவனம் மற்ற அடிப்பமையிலும் கல்வியினை வகைப்படுத்துவதற்கு முற்படும் போது அதனை கல்வி முறைமை அல்லது கல்வியின் வகைமை என வகைப்படுத்த முடியும்.

அதனடிப்படையில் கல்வி வழங்கப்படும் முறைகளை இரண்டு வகைகளாகப் பிரிக்க முடியும் 
 1. நிறுவனம் சார் கல்வி முறைமை 
 2. நிறுவனம் சார கல்வி முறைமை எனலாம் 
மேலும் நிறுவன அடிப்படையிலான கல்வியானது இரு உப பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது.
 1. முறை சார் கல்வி 
 2. முறை சாரா கல்வி 
எனவே தான் கல்வி வழங்கப்படும் சகல விதமான அடிப்படைகளையும் கொண்டு அவைகளை மூன்றி விதமான முறைகளில் பிரித்து வகைப்படுத்துவதே கல்வி முறைமையாகும். இதனை மூன்று நிலைகளில் வகைபிரித்துக் காட்டப்படுகின்றது.
 1. முறை சார் கல்வி (Formal Education)
 2. முறை சார் கல்வி (Non-Formal Education)
 3. முறையில் கல்வி (informal Education)
இதனை பின்வருமாறு வகைப்படுத்திக்காட்டவும் முடியும்.


முறைசார்ந்த கல்வி

இது நன்கு திட்டமிடப்பட்டதும், ஒழுங்மைக்கப்பட்டதும், நிறுவனப்பாங்கானதும் குறிப்பிட்ட ஆசிரியர்களைக் கொண்டு கற்பிக்கப்படும் கல்வி முறை முறைசார் கல்வி முறை எனப்படுகின்றது. மேலும் இவைகள் வரையரை செய்யப்பட்ட இலக்குடையதாகவும் நீண்ட கால இலக்குகளைக் கொண்டதாகவும் தொடர்ச்சியான படிமுறைகளைக் கொண்ணடைந்ததாகவும், வயது தரம் என்பவற்றுக்கு ஏற்ப திட்டமிடப்பட்டதாகவும், நீண்ட காலத்திட்டத்தினைக் கொண்டதாகவும் கட்டாவ வரவுகளைக் கொண்டதாகவும் இது திட்டங்களுக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ளது.

முறைசார்ந்த கல்வியானது ஆரம்பத்திலிருந்தே அதைச்சார்ந்தவர்களுக்கு எழுத்தறிவையும், எண்ணறிவையும் வழங்கும் ஒன்றாகவே செயற்பட்டது. இதனால் நூலறிவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவது சிறப்புப் பண்புகளிள் ஒன்றாக காணப்படுகின்றது. பாடத்திட்டத்தின் நெகிழ்ச்சியற்ற தன்மையும், செய்முறைகளிலும் பார்க்க கோட்பாடுகளுக்கு அதிக இடமளிக்கப்படுவதும் இம்முறையின் மற்றெரு சிறப்புக்களில் ஒன்றாகும் 

முறைசார் கல்வியில் இருக்க வேண்டிய இயல்புகள்
 1. குறிப்பிட்ட வயது
 2. குறிப்பிடப்பட்ட நோக்கம்
 3. முறையான பாடவிதானம்
 4. முழுமையான நிறுவன கட்டமைப்பு
 5. பரீட்சை முறைமைகள் 
 6. சான்றிதழ்கள் வழங்கப்படும் முறைமைகள் 
 7. முழுமையாக ஒழுங்கு பேணப்படல். 
முறையான கல்விகள் வழங்கப்படும் சந்தர்ப்பம் அல்லது நிறுவனங்கள் 
பொதுவாக இது அரசோடு சார்ந்த நிறுவனங்களிலே வழங்கப்படுகின்றது. உதாரணமாக:

பாடசாலைகள்
பல்கலைக்கழகங்கள்
முழுநேர தொழிநுட்ப நிறுவனங்கள்
- கல்வியியற் கல்லூரிகள் 
- ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள் 
- முழுநேர தொழிநுட்பக் கல்லூரிகள்

எனவாறு முறைசார் கல்வித்திட்ங்களை வரையரை செய்ய முடியும்.

முறைசாரா கல்வி முறை

இது முறையான பள்ளிக் கல்லூரிகளுக்கு அப்பால் ஒழுங்கமைக்கப்பட்டதும், முறையாக வழங்கப்படுவதுமான கல்வி முறைசாராத கல்வி எனலாம். இது கற்போரின் தேவைகள் மற்றும் பயன்பாடுகள், பொருத்தமுடைமை ஆகியவற்றுக்கு ஏற்றாவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு குறிப்பிட்ட குழுவினருக்கு கற்றல் குறிக்கோள்களை கற்பிப்தற்று பயன்படுத்தப்படுகின்றது. இது உலக நாடுகளல் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவும், சுயதிறன்களை மேம்படுத்துகின்ற ஒன்றாகவும் காணப்படுகின்றது. 

முறைசார் கல்வியை விடவும் திறன்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கும் ஒன்றாகவும். சகல வயது மட்டத்திலுள்ளவர்களுகம் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாரும் தேவைக்கு ஏற்றவாரும் கற்கை நெறிகளை அமைத்துக் கொள்ளும் அளவுக்கும், கற்பித்தலை விடவும் கற்றலுக்கு இது முன்னுரிமை வழங்குவதோடு முறையான கல்வித்திட்டத்தில் காணப்படுகின்ற போட்டித்தன்மையற்றதாகவும் இது காணப்படுகின்றது.

முறைசாரா கல்வி வழங்கும் அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள்

அரசசார் நிறுவனங்கள்
 1. திறந்த பல்கலைக்கழகங்கள்
 2. தேசிய இளைஞர் சேவை மன்றம்
 3. தேசிய தொழில் பயிலுனர் அதிகார சபை
 4. தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவனம்
 5. கல்வி அமைச்சு
அரசசார்பற்ற நிறுவனங்கள்
 1. சர்வோதயம்
 2. பெண்கள் செயலகம்
 3. தனியார் கல்வி நிறுவனங்கள் 
 4. சமய சங்கங்கள்
இவ்வாறான அரசசார், அரசசார்பற்ற நிறுவனங்கள் முறைசார கல்வி வழங்குவதில் தங்களுடைய பங்களிப்பை வழங்குகின்றன.

முறையில் கல்வி 

இது ஒரு நபர் தமது சூழல், குடும்பம், நண்பர்கள் மூலம் வாழ்நாள் முழுவதுமாற கற்றுக்கொள்ளும் கல்வி முறைகள் முறையில் கல்வி எனப்படுகின்றது. இதற்கு நிறுவனம் என்ற ஒரு கட்டமைப்பு கிடையாது. வரையரை செய்யப்பட்ட ஒரு இலக்கோ, தொடர்ச்சியான படிமுறையே, வயது மற்றும் தரம் கொண்டிருக்காத ஒன்றாகவும் கல்வி கற்பிக்கப்படுகின்ற ஒன்றாகவும் இருக்கமாட்டாது.


ஏனைய கல்வி முறைகளை விட இதில் பணம் அதிகம் செலவு செய்யப்படுவதில்லை மீதப்படுத்தப்படுகின்றது. இக்கல்வியானது பரம்பரை, சமூக, ரீதியாகவும் வழங்கப்படுகின்து.

முறையில் கல்விகள் வழங்கப்படும் சந்தர்ப்பம் அல்லது நிறுவனங்கள்.

 • சமூகச் சூழல் 
 • வானொலி
 • குடும்ப அங்கத்தவர்கள் 
 • தெலைக்காட்சி 
 • நண்பர்கள்
 • உறவினர்கள் 
 • தொலைத் தொடர்பு சாதனங்கள் 
 • பத்திரிகை
ஒரு நிறுவன ரீதியாக இல்லாமல் வழங்கப்படுவதைக் குறிப்பிடலாம்.

இக்கல்வி முறைகள் பற்றி சுருக்கமாக.


முறைசார் கல்வி
முறை சாரா கல்வி
முறையில் கல்வி
 • நிறுவன ரீதியானது
 • வரையரை செய்யப்பட்ட இலக்கு
 •  நீண்ட கால இலக்கு 
 • தொடர்ச்சியான படிமுறையுண்டு
 • வயது, தரம் உண்டு
 • நீண்டகால கலைத்திட்டம்
 • கட்டாய வரவு உண்டு 
 • எழுத்தறிவு, எண்ணறிவு
 • குறிப்பிட் ஆசிரியர்
 • கல்வியை வழங்குதல்
 • பாடசாலைகள்
 • பல்கலைக்கழகங்கள்
 • ஆசிரியர் பயிற்றி கலாசாலை 
 • நிறுவன ரீதியானது
 • வரையரை செய்யப்பட்ட இலக்கு
 • குறுகிய கால இலக்கு
 • தொடர்ச்சியான படிமுறை இல்லை
 • வயது, தரம் இல்லை
 • குறுகியகால கலைத்திட்டம்
 • கட்டாய வரவு இல்லை
 • தொழில்சார் பயிற்சி
 • குறிப்பிட் ஆசிரியர்
 • கல்வியை வழங்குதல்
 • அரச சார்பற்ற நிறுவனம்
 • பிரதேச செயலகங்கள்
 • முதியோர் இல்லங்கள்
 • நிறுவன ரீதியற்றது 
 • இலக்கு 
 • இல்லை
 • இல்லை
 • இல்லை
 • இல்லை
 • இல்லை
 • இல்லை
 • சமூக இணக்கம்
 • இல்லை
 • கல்வியை வழங்குதல்
 • வீடு
 • சூழல்
 • பத்திரிகைகள்

உசாத்துணைகள்:

 • மன்சூர் எம்.கே.எம் (2005), கல்வி தத்துவங்கள்,மேன்ஸ்,அக்கரைப்பற்று
 • யோகராஜா கி, அடிப்படை பாடசாலை முகாமைத்துவம், வவுனியா
 • Bernstein, B. (1971). Theoretical Studies towards a Sociology of Language, Class, Codes and Control Vol. 1, London: Routledge and Kegan Paul
 • Bourdieu, P. & Passeron, J. C. (1970). La Reproduction. Elements pour une théorie du système d’enseignement, Paris: Editions de Minuit.
 • du Bois-Reymond M. & Chisholm, L. (2006). Modernisation of Youth Transitions in Europe, San Francisco: Jossey-Bass.
 • http://enhancinged.wgbh.org/started/what/formal.html
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -