சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் ஏ.அச்சு முஹம்மதின் மறைவுக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!



ஊடகப்பிரிவு –
மூக செயற்பாட்டாளரும் சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளருமான ஏ.அச்சு முஹம்மட் (நைப்) அவர்களின் இறை அழைப்பு தமக்கு கவலையளிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அவர் தனது அனுதாபச் செய்தியில்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தரான ஏ.அச்சு முஹம்மட் (நைப்) அவர்கள், புனித ஹஜ் கடமையில் ஈடுபட்டிருந்தவேளை, மதீனாவில் இறையடி சேர்ந்ததாக அறியக்கிடைத்தது. "ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும்" இந்த நியதியின் அடிப்படையில், அல்லாஹ்! அவ்வாறானதொரு நற்பாக்கியத்தை, நல்ல மெளத்தை அவருக்கு அருளியுள்ளான்.
அன்னார் ஆசிரிய ஆலோசகராக இருந்து, சம்மாந்துறை பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்காக பெரிதும் உழைத்தவர். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் நல்லுறவைப் பேணியவர்.
அவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடனும் இணைந்து பயணித்ததோடு, கட்சியின் மேம்பாட்டுக்கு நேர்மையாக உழைத்தவர். அரசியல் ரீதியாக அண்மைக்காலமாக என்னுடன் நெருங்கிப்பழகிய அவர், அடிக்கடி கட்சி தொடர்பான விடயங்களில் கரிசனையுடன் கலந்தாலோசிப்பார்.
அரசியலில் ஈடுபாடுகொண்ட இளைஞர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி, சிறந்த வழிகாட்டியாக செயற்பட்டவர். மக்கள் நலனை முன்னிறுத்தி செயற்பட்ட அன்னாரின் இழப்பு, சம்மாந்துறை மண்ணுக்கும் மக்களுக்கும் பேரிழப்பாகும்.
அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு, இழப்பை தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவத்தை அவர்களுக்கு வழங்க வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ்! அன்னாரின் சமூகப் பணிகளைப் பொருந்திக்கொண்டு, அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவன பாக்கியத்தை அருள வேண்டுமென பிரார்த்திக்கின்றேன். ஆமீன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :