கிரிக்கட்டும் எலிசபெத்தும்
++++++++
Mohammed Nizous
செஞ்சரி அடிக்காமலே
செத்துப் போயிட்டியே பாட்டி
பால் போட்டது விதி.
பவுண்டரியைத் தாண்டியது உயிர்.
விதி எறிந்தால்
விக்டோரியா பரம்பரை என்றாலும்
விக்கட் விழாமல் இருக்காது.
அடுத்த முனையில்
அதிரடியாய்
ஆடிக் கொண்டிருந்த
டயானா
ரன் அவுட் ஆகியதன்
ரகசியம் இன்னும்
கிசு கிசுக்கப் படுகிறது பாட்டி
48ல் நடந்ததது
ஞாபகம் வருகிறது பாட்டி.
நீ
அதிரடியாய் ஆடியதில்
அடிபட்ட பந்து ஒன்றுக்கு
ஆறுதல் அளிப்பதற்காய்
பார்த்துக் கொண்டிருந்தவரிடம்
பக்குவமாய்க் கொடுத்தாய்.
அன்று
பந்தாவாக
பந்து பெற்றுக் கொண்ட
பார்ட்டிகள்
இன்று
பந்தை அடகு வைத்து விட்டு
பணம் வாங்கிப்
பங்கு போட்டுக் கொண்டார்கள்
உன்னிடமே இருந்திருந்தால்
உடைந்த பந்தாவது
எஞ்சி இருக்கும் பாட்டி.
ஒன்று மட்டும்
உண்மை பாட்டி.
எலியாக இருந்தாலும்
எலிசபெத்தாக இருந்தாலும்
ஆட்டம் முடிந்தால
அவுட்டாகித்தான் ஆகனும்.
0 comments :
Post a Comment