மனித உரிமை பணிக்கான அமைப்பினால் நூல்கள் வழங்கும் நிகழ்வு.



ஏறாவூர் நிருபர் சாதிக் அகமட்-
னித உரிமை பணிக்கான அமைப்பின் கிழக்கு மாகாண அமைப்பாளர் எம்.எப்.எம். பாறூக் தலைமையில் ஏறாவூர் மட் அல் அஸ்ஹர் பெண்கள் உயர் தர பாடசாலை மண்டபத்தில் இடம் பெற்றது.

நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி பணிமனையிலிருந்து எம்.எல்.ஏ.சபூர்(ஐ எஸ்.ஏ) பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன், கௌரவ அதிதிகளாக பொலிஸ் நிலைய நிருவாகப் பொருப்பதிகாரி, சப் இன்ஸ்பெக்டர் எஸ். எல்.சறூக், சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஏ.சி.நஜிமுதின், ஆகியோரும்,விசேட அதிதிகளாக மனித உரிமை அமைப்பின் இணைப்பாளர் றிபாட் யாசீனும் கலந்து சிறப்பித்ததுடன் பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கு "மன நலம் பேனுவோம் உடல் நலம் காப்போம் "எனும் நூல் சுமார் நூறு மாணவர்களுக்கு வழங்கப்பட்டதுடன் அதிதிகளுக்கும் வழங்கப்பட்டது. சிறந்த மாணவ சமூகத்தை உருவாக்க. வேண்டு மென்றும், வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்தவும், அதன் மூலம் மாணவர்களின் அறிவுக்கு விருந்தாக இந்நூல் அமையப் பெற்று இருப்பது கண்டு அதிதிகள் தங்கள் உரையில் சிறப்புரையாற்றினர்.

மனித உரிமை பணிக்கான அமைப்பின் செயலாளரும் நூலாசிரியருமான அல்ஹாஜ் அப்துல் கபூரின் விசேட செய்தி ஒன்றினை செய்தியாளர் பாத்திமா றிஸ்னி வாசிக்கப்பட்டதானது வரவேற்பை பெற்றிருந்தது.

நூல் பற்றிய கருத்துரையை அமைப்பின் இணைப்பாளர் றிபாட் யாஸீன் வழங்கினார். சமூகசேவை உத்தியோகத்தர் உரையாற்றும் போது இவ்வாறான ஏற்பாட்டை செய்து இவ்வாறான நூல்களை மாணவர்களுக்குபெற்றுக் கொடுக்க ஏற்பாடு பண்ணிய ஏற்பாட்டுக் குழுவுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அறிவு பூர்மான நல்ல பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பது கண்டு பெருமிதம் அடைவதாக கூறினார்.

பிரதம அதிதி சபூர், மாணவர்களுக்கு கிடைத்துள்ள சிறந்த நூலை நன்கு பயன்படுத்தி சகல விடயத்துக்கும் தேவையான அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள பயன்படுத்த வேண்டு மென்றார். பாடசாலை மாணவர்களுக்கு அதிதிகளால் நூல்கள் வழங்கப்பட்டு நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது.






















எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :