சாய்ந்தமருதில் போதைப்பொருள் எதிர்ப்பு மகளிர் எழுச்சி மாநாடு!



நூருல் ஹுதா உமர்-
சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளை வலுவூட்டும் நோக்கில் சமுதாய அமைப்பின் நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கி வைக்கும் நிகழ்வு (29) வியாழக்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சமுர்த்தி தலைமை பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சி.ஏ.நஜீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடையாள அட்டைகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் ஏ.ஜே.நுஸ்ரத் பானு, சமுர்த்தி வங்கி சங்கத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் றியாத் ஏ.மஜீத், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் எஸ்.றிபாயா, சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல். ஜஃபர், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களை வழிநடத்தும் அபிவிருத்தி உத்தியோகத்தர் றிகாஸா ஷர்பீன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.எம்.அபுல் ஹுதா, எம்.எம். ஜாபீர், சமுர்த்தி பிரதேச சமுதாய அமைப்பின் தலைவர் கே.எம்.கபீர், பொருளாளர் யூ.எல்.ஜுனைதா உள்ளிட்ட சமுதாய அடிப்படை அமைப்புகளின் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது சமுதாய அடிப்படை அமைப்புகளின் நிர்வாகிகள் 200 பேருக்கு இந்த அடையாள அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டது. சாய்ந்தமருதில் மே 31 - ஜூன் 17 வரை வீடு வீடாக போதைப்பொருள் மற்றும் புகைத்தல் எதிர்ப்பு பிரச்சாரத்தினை மேற்படி சமுர்த்தி சமுதாய அமைப்புக்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட உறுப்பினர்கள் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஜூன் 04 ஆம் திகதி சாய்ந்தமருதில் போதைப்பொருள் எதிர்ப்பு மகளிர் எழுச்சி மாநாடு நடத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.








எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :