நோன்பில்.. நீங்களும் நாங்களும்நோன்பில்.. நீங்களும் நாங்களும்
++++++++++
Mohamed Nizous


நாங்கள்
தயிருக்காக
தயாராகும் போது
நீங்கள்
உயிருக்காக
ஒளிந்து கொண்டு இருப்பீர்கள்


கஞ்சி வாளிகள்
கடை வீதிகளில்
கட்லட் தேடும் இங்கு.
அஞ்சி வாழும்
அகதி முகாமில்
அவதிப் படுவீர்கள்
அங்கு


சமுசாவில்
கீமா குறைந்தாலும்
சண்டையாகும் இங்கு.
சம்சாரம்
மாமா இறந்தாலும்
சகித்துக் கொண்டிருப்பீர்கள் அங்கு.


நாங்கள்
உண்டு விட்டு
உதயத்துக்கு முன்
உறங்கி விடுவோம்


நீங்கள்
குண்டு பட்டு
கொஞ்சம் கொஞ்சமாய்
இறந்து கொண்டிருப்பீர்கள்


முகனூலில்
எட்டா இருபதா என்று
இரண்டு பிரிவாய்
முரண்டு பிடிப்போம்.


முகாமில்
எதிரியின் ஏவுகணை
எட்டா இரு(ப்)பதற்காக
மிரண்டு போய் இருப்பீர்கள்


உண்ணாடும்
சர்வதேசமும்
ஒயாமல் தர்க்கிக்கும்
இந்தத் தேசத்தில்.


உண்ணாதும்
உடுக்காதும்
நோயாலும்
நொந்து போகும்
காஸாவில்..


நாங்கள்
இருபத்தேழில்
விழித்துக் கொண்டிருக்கும் போது
நீங்கள்
இரத்தத்தில்
குளித்துக் கொண்டிருப்பீர்கள்


இங்கு
வரும்
கொண்டாட்டங்களுக்கு முன்
உங்கள்
திண்டாட்டங்கள் தீர
அள்ளாஹ் அருளட்டும்


நீங்கள்
தேசத்தால்
தூரமானாலும்
நேசத்தால்
நெருங்கியவர்கள்.


நொந்து போகாமல்
நோன்பு பிடிக்க
எங்கள் பிரார்த்தனைகள்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :