மடிகனணிகளை வழங்கும் 11 ஆவது அணியில் முதன்முறையாக கேகாலை தெஹியோவிட்டயைச் சேர்ந்த எம்.எம்.எவ். லுதாபா மற்றும் எம்.எம்.எவ். லுfப்றா ஆகியா இரட்டைச் சகோதரிகள் மடிகனணிகளைப் பெற்றிருந்தது விஷேட அம்சமாகும்.
நிகழ்வில் களனி பல்கலைக்கழகத்திலிருந்து எஸ்.ஏ. யேனோலி சேனாரத்ன, மன்னாரைச் சேர்ந்த எம்.ஜெ. ஜெஸ்லா மற்றும் பன்னல ஏ.எவ். அஸ்ரா ஆகியோரும் மடிகனணிகளைப் பெற்றுக்கொண்டனர்.
ஹாஷிம் உமர் பௌண்டேசன், பல்வேறு மக்கள்நல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அந்த அடிப்படையில் மாணவர்களின் கல்வி நலனுக்கு மிகவும் பிரதானமாக தேவைப்படும் மடிக்கணினிகளை "கல்விக்கு கைகொடுப்போம்" எனும் திட்டத்தின்கீழ் நடைமுறைப்படுத்தி வருகின்றது.
கடந்த நோன்புப் பெருநாளிலும் வரவுள்ள ஹஜ்ஜுப் பெருநாளிலும் ஊடகவியலாளர்களை மகிழ்விக்கும் வகையில் தெரிவுசெய்யப்பட்ட முஸ்லிம் ஊடக அமைப்புகளுக்கு நிதியுதவிகளைச் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தே. செந்தில் வேலர், வசந்தம் தொலைக்காட்சி செய்தி முகாமையாளர் சித்தீக் ஹனீபா, மேமன் கவி, தமிழன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஏ.எம்.ஜௌபர் மற்றும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆகிப் மொஹம்மட், பெற்றோர்கள் ஊடகவியலாளர்கள் என பலரும் பங்குகொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment