மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் அறிஞர்களில் ஒருவரும், கிழக்குப்பல்கலைக்கழக கெளரவ இலக்கிய கலாநிதி பட்டம் பெற்றவருமான வித்துவான் அமரர் சா.இ.கமலநாதன் அவர்களின் நினைவு நூற்றாண்டு விழா (07) சனிக்கிழமை காலை 10 மணிக்கு மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
மகுடம் கலை இலக்கிய வட்டம் நடாத்தும் இந்த நினைவு நூற்றாண்டு விழா, கிழக்குப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் அருட்பணி அ.அ.நவரத்தினம் அடிகளார் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இவ்விழாவின்போது ஓய்வுநிலை பேராசிரியர் கலாநிதி சி.மெளனகுருவினால் 'பன்மைத்துவர் கெளரவ இலக்கிய கலாநிதி வித்துவான் சா.இ.கமலநாதன்' என்ற நூல் வெளியீடும் செய்யப்படவுள்ளது.
இவ்விழாவின் பிரதம விருந்தினராக ஓய்வு நிலை வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி உள்ளிட்ட கல்வியியலாளர்கள், கலை இலக்கியவாதிகள் என பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
0 comments :
Post a Comment