ஐஸ் போதைப் பொருளுடன் கைதான வியாபாரி மீது விசாரணை முன்னெடுப்பு



பாறுக் ஷிஹான்-
ஸ் போதைப் பொருளுடன் கைதான ஐஸ் போதைப் பொருள் வியாபாரி மீது மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை பின் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் நடமாடிய வியாபாரியை சனிக்கிழமை (31) இரவு கல்முனை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

கல்முனை விசேட அதிரடிப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 39 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் ஐஸ் போதைப் பொருளுடன் கல்முனை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 3 கிராம் 510 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர் உட்பட சான்றுப்பொருட்கள் யாவும் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கைது நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்குறித்த சந்தேக நபர் நீண்ட நாட்களாக மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து ஐஸ் போதைப் பொருளை விற்பனை செய்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :