மலையக வானவில் பெருமிதம் என்ற தொனிப்பொருளில் கீழ் ஹட்டனில் பேரணி



க.கிஷாந்தன்-
லையக வானவில் பெருமிதம் என்ற தொனிப்பொருளில் கீழ் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தின் உரிமைகளைக் கோரி (01) அன்று ஹட்டனில் பேரணி ஒன்று நடைபெற்றது.

மலையக அறக்கட்டளை என்ற பெயரில் பல அரச சார்பற்ற அமைப்புகள் இணைந்து இந்த பேரணியை ஏற்பாடு செய்திருந்தன.

ஹட்டன் பஸ் நிலையத்திற்கு அருகில் தொடங்கிய பேரணி, அட்டன் டிக்கோயா நகர சபை மண்டபம் வரை சென்றடைந்தது. இதன்போது ஓரினச்சேர்க்கையாளர் சமூகமும் பேரணியில் இணைந்துக் கொண்டதோடு, பல தோட்டத் தொழிலாளர்களும் கலந்துக் கொண்டு நகர சபை மண்டபத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர்.
தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தின் உரிமைகளை வழங்குவதற்காக (01) அன்று இரண்டாவது முறையாக இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், கடந்த ஆண்டு நுவரெலியாவிலும் இதேபோன்ற பேரணி நடத்தப்பட்டதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :