நாவலப்பிட்டி பெனிசுதுவ பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சரத்குமார பியதாஸ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நாவப்பிட்டியிலிருந்து கினிகத்தேனை பகுதிக்கு சென்ற நாவலப்பிட்டி டிப்போவிற்கு சொந்தமான திருத்தப்பணி சேவை பஸ் வண்டி கினிகத்தேனை அனுரத்த பிரத்தமிக்க வித்தியாலத்திக்கு அருகில் 19/ 09 மாலை விபத்துக்குள்ளாகாயுள்ளது.
விபத்துக்குள்ளான பஸ்ஸின் சாரதி மதுபோதையில் இருந்துள்ளதுடன் விபத்து தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்காது தலைமறைவாகியுள்ளர்.
படுகாயமடைந்தவர் நாலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தலைமறைவாகிய பஸ் சாரதியை நாவலப்பிட்டி போக்குவத்து பொலிஸார் கைது செய்துள்ளதுடன் நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment