திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடற்படையினருக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பணிப்புரை



திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து கூடியவிரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடற்படையினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனால் குறித்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி அறிக்கையை அடிப்படையாகக்கொண்டே சம்பவம் தொடர்பில் முடிவொன்றுக்கு வரமுடியும் எனவும், அடுத்தக்கட்ட நடவடிக்கையை முன்னெடுக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

திருகோணமலை, குச்சவெளி கடற்பரப்பில் நேற்று (03.06.2025) சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார் எனக் கூறப்படும் மீனவர் மீது கடற்படையினர் மேற்கொண்டனர் எனக் கூறப்படும் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே சம்பவம் தொடர்பில் அவர் அறிக்கை கோரியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,

'சட்டவிரோத மீன்பிடி முறையானது கடலுக்கும், நாட்டுக்கும் கேடு விளைவிக்கும். ஒரு சில மீனவர்களின் வருமானத்துக்காக பெரும்பாலானவர்களின் வருமானம் இழக்கப்படுகின்றது.

அதனால்தான் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுக்குமாறு கடற்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை சம்பவம்கூட, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையால் ஏற்பட்டதெனக் கூறப்படுகின்றது. விசாரணைகளின் பின்னரே உண்மை என்னவென்பது தெரியவரும்.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையும் தவறு, துப்பாக்கிச்சூடு நடத்துவதும் தவறு, அதற்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்குவதும் தவறு. எனவே, அறிக்கை கிடைத்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்." - என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :