தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கு பௌதீக வளங்களை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்



க.கிஷாந்தன்-
லவாக்கலை பிரதேச செயலகத்திற்கு பௌதீக வளங்களை வழங்குமாறு கோரி, அந்த அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குழு ஒன்று (26.05.2025) அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தலவாக்கலையில் உள்ள தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கு சொந்தமான இரண்டு மாடி கட்டிடத்தில் 2020 ஆம் ஆண்டு பிரதேச செயலகம் நிறுவப்பட்டது. மேற்படி பிரதேச செயலகத்தின் கீழ், தலவாக்கலை லிந்துல நகர சபைப் பகுதி, திம்புள்ள கிராம சேவகர் பகுதி மற்றும் கொட்டகலை, அக்கரபத்தனை ஆகிய பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரம் குடியிருப்பாளர்களுக்கு சேவைகள் வழங்கப்படுகின்றன.

இந்தப் போராட்டத்தை தொழிற்சங்க கூட்டுக் குழு ஏற்பாடு செய்திருந்தது. அதன் உறுப்பினர் தம்மிக்க முனுசிங்க, இந்தப் பிரதேச செயலகத்தில் சுமார் 150 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணிபுரிவதாகவும், பிரதேச செயலகத்தில் உள்ள இடம் அதற்குப் போதுமானதாக இல்லை என்றும் கூறினார். அதேபோல், பிரதேச செயலகத்தில் பௌதீக வளங்கள் இல்லாததால், அந்த அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு திறமையான சேவையை வழங்க முடியவில்லை.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் பொறுப்பான அதிகாரிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், இதுவரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை.

எனவே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த பிரதேச செயலகத்திற்கு அருகில் இருந்து தொடங்கிய போராட்டம் தலவாக்கலை நகரம் வரை சென்றது. இதனால் ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியை மறித்ததன் காரணமாக தலவாக்கலை பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாய்த்தரக்கம் ஏற்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :