உங்கள் ஊரிலிருந்து ஒருவரை பிரதேச சபைக்கு அனுப்புங்கள் - அனுஷா சந்திரசேகரன்.



கரபத்தனை பிரதேச சபைக்கு ஜனநாயக தேசிய கூட்டணியின் தபால்பெட்டி சின்னத்தில் போட்டியிடும் வீரமலை குணசேகரன் (ராஜா) வேட்பாளரை ஆதரிக்கும் மக்கள் சந்திப்பொன்று அகரப்பத்தனை ஹாடலி பகுதியில் இடம்பெற்றது.

இதில் சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் அனுஷா சந்திரசேகரன் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது பொதுமக்களிடம் உரையாற்றிய அனுஷா சந்திரசேகரன்,

உங்கள் ஊருக்கு சேவை செய்ய, உங்கள் ஊருக்கான அபிவிருத்திகளை செய்ய, உங்கள் ஊரை முன்னேற்றமடைய செய்ய காலாகாலமாக அந்த கட்சி இந்த கட்சி என வாக்களித்தது போதும், உங்கள் ஊரிலிருந்து ஒருவரை தெரிவு செய்யுங்கள்,

ஊழல், மோசடி குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லாத, மக்களோடு மக்களாக இருப்பவர்களையே நாம் இம்முறை தபால் பெட்டி சின்னத்தில் அகரபத்தனை பிரதேச சபைக்கு களமிறக்கியிருக்கிறோம்.

ஆகவே இவர்களை ஆதரித்து பிரதேச சபைக்கு தெரிவு செய்வதன் மூலம் பிரதேச சபையினால் வழங்கப்படும் சேவைகளை எமது மக்களுக்கு இலகுவாக பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் , ஆகவே இம்முறை தனித்துவம் காத்த தலைவரின் வழியில் பயணிக்கும் எம்மவர்களுக்கு தபால் பெட்டி சின்னத்துக்கு வாக்களித்து அமோக வெற்றிபெறச்செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :