திருகோணமலை என். சீ. வீதி மொஹிதீன்தீன் ஆண்டவர் ஜும்மா பள்ளி நிர்வாகமும், சென்ட்ரல் ரோட் மஸ்ஜிதுல் அலி ஜூம்மா பள்ளிவாயல் நிர்வாகமும் இணைந்து திருகோணமலை இஸ்லாமிய வர்த்தக நலன்புரி அமைப்பின் உதவியுடன் வறுமையில் வாழும் குடும்பங்களுக்கு அத்தியவசிய பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.
திருகோணமலை நகரை அண்மித்த 10ம் குறிச்சி,
திருக்கடலூர் மற்றும் பெரியகடை, சோனகவாடி போன்ற இடங்களில் சமூர்த்தி உதவிகள் பெறாத வாழ்வாதாரத்தில் பின்தங்கிய 600 குடும்பங்களுக்கு அத்தியவசிய பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
திருகோணமலை இஸ்லாமிய வர்த்தக நலன்புரி அமைப்பின் இணை தலைவர்களான எஸ்.எச். எம் நியாஸ் ஹாஜி,இல்யாஸ் ஹாஜி உபதலைவர்களான எம். எஸ். பீ. கணி, ஏ. ஜே. எம். ஹஸன் மற்றும் செயலாளர் எம். எப். வலீத் ஹாஜி, றிலா ஹாஜி ஆகியோர்கள் கலந்து கொண்டு இப்பொதியினை வழங்கி வைத்தனர்.
இதேவேளை இன மத பேதமின்றி அனைத்து மக்களும் இந்த கொடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாங்கள் எம்மாலான உதவிகளை அனைத்து இன மக்களுக்கும் செய்ய முயற்சிக்க வேண்டும் எனவும் இணைத்தலைவர் நியாஸ் ஹாஜி தெரிவித்தார்.