கலாசார அதிகார சபை நிர்வாக குழுவில் செல்வி. றுத்றா அமிர்தரெத்தினம் தேர்வு – மாணவர்களுக்கான புதிய பார்வை!



பாறுக் ஷிஹான்-
ட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக அலுவலக கலாசார அதிகார சபை கூட்டத்தில் இலங்கை நடிகை மற்றும் ஆன்மீக சொற்பொழிவாளரான பல்துறை ஆளுமையாளர் செல்வி. றுத்றா அமிர்தரெத்தினம் நிர்வாக குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் இந்தப் புதிய பொறுப்பினைப் பெற்றது குறித்து அவர் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்ததோடு, மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொண்டு வர பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களை முன்வைத்துள்ளார்.

அவரின் முக்கிய திட்டங்கள் பின்வருமாறு:
இலக்கணமும் இலக்கியத் திறனாய்வும் தொடர்பான பயிற்சிகள்,சிறுகதை, நாவல் எழுத்து மற்றும் புத்தக வெளியீடு குறித்து நடைமுறை பயிற்சிகள், பாகவதம் மற்றும் பகவத்கீதையின் ஆன்மிகக் கருத்துகளை எளிமையாக கற்பித்தல்,ஆன்மீகம், ஹரிகதை மற்றும் ஊக்கமளிக்கும் சொற்பொழிவு பயிற்சிகள்
இவை அனைத்தும் மாணவர்களின் விழிப்புணர்வையும், விழுமியத்தையும் வளர்க்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

செல்வி. றுத்றா அமிர்தரெத்தினம் தெரிவித்ததாவது

"பாடசாலைகள் அல்லது சமூகங்களின் சிறிய மாணவ குழுக்களை அமைத்துக் கொடுத்தால், இத்தகைய பயிற்சி பட்டறைகள் மற்றும் செயலமர்வுகளை முழு உறுதியுடன் வழங்க தயார்."

சமூக நலனுக்காகவும் மாணவர் முன்னேற்றத்திற்காகவும் கலையும் ஆன்மீகமும் ஒன்றாகச் செறிந்து இயங்கும் இந்த முயற்சிக்கு அவர் அனைவரின் ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் நாடுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :