ஆங்கில டிப்ளோமா கற்கை நெறியினை உத்தியோகபூர்வமாக ஆரம்பத்தித்து வைக்கும் நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
நிகழ்வின்போது கலை மற்றும் கலாச்சார பீடத்தின் பீடாதிபதி, பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில், DELTதிணைக்களத்தின் தலைவர், கலாநிதி எம்.ஐ. பௌசுல் கரீமா, சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எம்.ரீ. அஹமட் அஸ்ஹர் ஆகியோரும் உரையாற்றினர்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகம் 25 வருடங்களுக்கு மேலாக ஆங்கில டிப்ளோமா கற்கை நெறியினை நடாத்தி வருவதாகவும் அதனூடாக பல நூறு மாணவர்கள் நன்மையடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வின்போது தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான எம்.ஏ,எம். சமீம் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எம். அப்துல் றஹ்மான் மற்றும் விரிவுரையாளர் இசட். ஹுறுள் பிர்தொஸ், ஆங்கில மொழி போதனாசிரியர் எம்.எச்.எம். அல் இஹ்சான் உள்ளிட்டவர்களுடன் கற்கை நெறியைத் தொடரவுள்ள மாணவர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment