தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்துக்காக 2022/2023 ஆம் கல்வி ஆண்டுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர் சங்க தலைவர் உள்ளிட்ட குழுவினர்களுக்கு நியமனக்கடிதன்களை வழங்கி வைக்கும் நிகழ்வு 2025.06.20 ஆம் திகதி பீடத்தின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பீடாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீட மாணவர் சங்கங்கள் சிறந்த முறையில் செயட்ப்பட்டன; என்றும் தற்போது தெரிவாகியுள்ள சங்கத்தின் நிர்வாகிகள் மாணவர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் குறிப்பாக பல்கலைக்கழகத்துக்கும் இணைப்புப்பாலமாக செயற்ப்பட்டு எதிர்காலத்தில் சிறந்த கல்விச் சமூகம் ஒன்றை உருவாக்க பணிபுரிய வேண்டும் என்றும் பீடாதிபதி என்ற முறையில் மாணவர் சங்கம் முன்னெடுக்கும் அனைத்து நல்ல திட்டங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்குவேன் என்றும் தெரிவித்தார்.
நிகழ்வின்போது தலைவராக மாணவர் ஆர். ஹானஸ் அஹமட், உப தலைவராக மாணவர் எம்.ஜே.எ. முபாரக், செயலாளராக மாணவர் எம்.கே.எம். சார்தாத், இளைய பொருளாளர் மாணவர் எம்.எஸ்.எம்.ஸஜீத், தொகுப்பாளர் மாணவர் என்.எம்.எம். அஸ்மி,
உறுப்பினர்களாக மாணவர் ஏ.எச்.எம். பஸ்ரான், மாணவர் எம்.ஏ. ஆதிப் அகமட், மாணவர் எம். நுசைர் அகமட், மாணவர் கே.எம். ருசைத்
மாணவி ஏ.எச்.எப். சிஃப்னாஸ், மாணவி என்.பி. ருனைஸா, மாணவி எம்.யு.எப். ரம்லா, மற்றும் மாணவி எம்.எஸ்.எப். முன்ஷிஃபா ஆகியோர் நியமனக்கடிதன்களைப் பெற்றுக்கொண்டனர்.
0 comments :
Post a Comment