காரைதீவு பிரதேச சபை தவிசாளராக எஸ். பாஸ்கரனும், உப தவிசாளராக எம்.எச்.எம். இஸ்மாயிலும் தெரிவு !



நூருல் ஹுதா உமர்-

ம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு செய்யும் கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் காரைதீவு பிரதேச சபை சபா மண்டபத்தில் இன்று (25) மாலை நடைபெற்றது.

திறந்த முறையில் நடைபெற்ற தவிசாளர் வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முன்மொழியப்பட்ட சுப்பிரமணியம் பாஸ்கரனும், தேசிய மக்கள் சக்தி சார்பில் முன்மொழியப்பட்ட கிருஸ்ணபிள்ளை செல்வராணியும் போட்டியிட்டனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முன்மொழியப்பட்ட சுப்பிரமணியம் பாஸ்கரனுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முன்னாள் உப தவிசாளர் ஏ.எம். ஜாஹீர் ஆகியோர் சார்பாக வாக்களித்தனர். தேசிய மக்கள் சக்தி சார்பில் முன்மொழியப்பட்ட கிருஸ்ணபிள்ளை செல்வராணிக்கு அதே கட்சியை சேர்ந்த எஸ். சுலட்சனா வாக்களித்தார். தேசிய மக்கள் சக்தி சார்பில் ஒருவர் முன்மொழியப்பட்டிருந்தும் கூட அந்த கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஏ. பர்ஹாம் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

உப தவிசாளராக காரைதீவு பிரதேச சபையின் சிரேஷ்ட உறுப்பினர் மாளிகைக்காட்டை சேர்ந்த எம்.எச்.எம். இஸ்மாயிலை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரேரித்தனர். போட்டிக்கு யாரும் முன்வராதமையால் சபையில் ஏகமனதாக எம்.எச்.எம். இஸ்மாயிலை உப தவிசாளராக அறிவிக்கப்பட்டர். இந்த அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. தாஹீர், எம்.எஸ். உதுமா லெப்பை, கே.கோடிஸ்வரன் உட்பட பிரமுகர்கள் உள்ளுராட்சி திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :