“நவீன நூலக சூழல்களில் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் புதுமையான வாடிக்கையாளர் சேவை நடைமுறைகளை ஊக்குவித்தல்” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற குறித்த பயிற்சிப் பட்டறையில் பங்குகொண்ட நூலகர்களுக்கு உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.
இத்திட்டம் இலங்கை அரசாங்கத்தின் டிஜிட்டல் மாற்றக் கொள்கையுடன் நெருங்கிய தொடர்புடையதாகவும், அரசு மற்றும் தனியார் துறைகளின் செயல்திறன் மற்றும் விளைவுத்திறனை மேம்படுத்தும் நோக்கில், அரசின் முயற்சியாலான நவீன டிஜிட்டல் கருவிகள், தளங்கள் மற்றும் செயல்முறைகளை கொண்டு; நிர்வாகச் செயல்களை எளிமைப்படுத்தி, சேவையை மேம்படுத்த உதவும்திட்டத்தை ஆதரிக்கும் நோக்கில் கட்டமைக்க ப்பட்டிருந்தது.
மேலும், "டிஜிட்டல் பொருளாதாரம்" மற்றும் "தேசிய டிஜிட்டல் மாற்றக் கொள்கை" போன்ற அரசின் முக்கிய திட்டங்களை இது ஆதரித்து, டிஜிட்டல் உட்பிரவேசம், தொழில்நுட்ப திறன், மற்றும் புதுமைமிக்க சமூகத்தை உருவாக்கும் பணிக்குப் பெரும் பங்களிப்பு செய்கின்றது.
இந்த நிகழ்வு, SEUSL, HealthNet Nepal, மற்றும் VuFind USA ஆகிய அமைப்புகளுக்கு இடையிலான தொடர்ந்துள்ள சர்வதேச ஒத்துழைப்பின் விளைவாகும். இதன் முக்கியமான சாதனைகளில் ஒன்றாக, இலங்கையில் முதல் முறையாக சர்வதேச டிஜிட்டல் நூலக திட்டமான – “2025 டிஜிட்டல் நூலக முகாமைத்துவ முன்னேற்றச் சான்றிதழ்” மூன்று மாத கலப்பு பாடநெறியாக 05 மே 2025 அன்று ஆரம்பிக்கப்பட்டது.
மேலும், இந்த முயற்சியின் கீழ் SEUSL நூலகத்தின் டிஜிட்டல் கட்டமைப்பு உலக தரத்தில் மேம்படுத்தப்பட்டது. இதன் மூலம், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உலகளாவிய தகவல்களுக்கும் புதிய டிஜிட்டல் வசதிகளுக்கும் மேம்பட்ட அணுகலை வழங்குகிறது.
நூலக சிரேஷ்ட உத்தியோகத்தர் சி.எம். முனாஸின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்த நிகழ்வின்போது தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத், பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர், வளவாளர் தலைவர், HealthNet Nepal பேராசிரியர் மோகன் ராஜ் பிரதான், வளவாளர் சந்திரா புஷண் யாதவ் ஆகியோரும்
அம்பாறை மாவட்டத்தின் கரையோர பகுதிகளில் உள்ள நூலகங்களில் பணியாற்றும் நூலகர்கள், இந்த பயிற்சியின் பயன்களைப் பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்த தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி நூலகர் எம்.சி.எம். அஸ்வர், சிரேஷ்ட உதவி நூலகர் ஏ.எம். நஹ்பீஸ், சிரேஷ்ட உதவி நூலகர் எஸ்.எல்.எம். சஜீர், உதவி இணைய முகாமையாளர் எம்.ஜெ.ஏ. சாஜித் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர்.
0 comments :
Post a Comment