மருதமுனையில் தீ விபத்து வீடு முற்றாக எரிந்து நாசம்



ஏ.எல்.எம்.ஷினாஸ், றாஸிக் நபாயிஸ், முஜீப் சத்தார்-
ம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை பெரியநீலாவணை அக்பர் கிராமத்தில் வீடொன்றில் நேற்று (26) இரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக குறித்த வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

சம்பவம் ஏற்பட்டதும் உடனடியாக செயல்பட்ட அருகில் உள்ள பொதுமக்கள் சுமார் ஒரு மணி நேரமாக முயற்சி செய்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

வீட்டில் இருந்த தளபாடங்கள், மின்சார பொருட்கள் உட்பட அனைத்து உடைமைகளும் தீயில் கருகி சாம்பலாகியது. எனினும் வீட்டிலிருந்து எவருக்கும் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை. வீட்டில் ஏற்பட்ட மின்னொழுக்கு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :