முஹர்ரம் கவிதை..!


****முஹர்ரம்****

முஸ்லிம் வருடமொன்று
முற்றுப் பெற்றது
இன்னுமொரு வருடம்
எட்டிப் பார்க்குது

எத்தனை மாற்றங்கள்
இந்த வருடத்துள்
அத்து மீறிய
ஆட்சி கவிழ்ந்தது
புது பலாய் கிளப்பிய
பொது பலாய் விழுந்தது
அத்வைதக் கொள்கை
ஆட்டம் கண்டது.

மக்கத்து நிகழ்வுகள்
மனதை தைத்தது
அப்துல் கலாம் எனும்
ஆளுமை மறைந்தது
சிரியா சிறுவனால்
சிந்தை அழுதது
பெரிய கிரேக்கம்
பிச்சை கேட்டது

புதிய உறவுகள்
பூவைச் சொரிந்தன
விதியால் சிலபேர்
விட்டுப் பிரிந்தனர்
எதுவும் நடக்காமல்
இன்னும் சிலபேர்கள்

புதிய வருடம்
நலவாய் அமைய
இதயம் கனிந்த
இனிய வாழ்த்துக்கள்

காத்தான்குடி நிஷவ்ஸ்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -