மாவடிப்பள்ளி அஷ்ரஃப் வித்தியாலய மாணவன் முஹம்மட் ஹிக்கமுக்கு கல்வியமைச்சின் பாராட்டு !



நூருல் ஹுதா உமர்-
ல்முனை கல்வி வலய மாவடிப்பள்ளி கமு/கமு/ அல் - அஷ்ரஃப் மஹா வித்தியாலய மாணவன் யாகூப் முஹம்மட் ஹிக்கம் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் சித்தி பெற்று சீனாவில் நடைபெற்ற சர்வதேச விஞ்ஞான ஒலிம்பியாட் முகாமுக்கு செல்வதற்கான வாய்ப்பையும் பெற்றிருந்தார்.

இவ்வாறு தெரிவான மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கல்வி அமைச்சில் (இசுருபாய வில்) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் அவர்களும் கௌரவ அதிதிகளாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாயக கலுவேவ அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன் கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளும், கல்வி திணைக்களத்தின் தேசிய, மாகாண, வலயமட்ட விஞ்ஞான பாடத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். இத்தகைய அடைவை மாவடிப்பள்ளி கமு/கமு/ அல் - அஷ்ரப் மகா வித்தியாலய மாணவன் யாகூப் முஹம்மட் ஹிக்கம் பெற்றுக் கொள்வதற்காக உழைத்த பங்களிப்பு செய்த அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும் என பாடசாலை அதிபர் ஏ.எல். ரஜாப்தீன் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :