அரசியல் ஆய்வாளர் நிலாம்டீன்-
1997.98.99 ஆண்டுக் காலங்களில் மறைந்த தலைவர் SLMC தலைவர் MHM MHM அஷ்ரப் என்னும் அமைச்சர் சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சியில் மிகவும் செல்வாக்காக அரசியலில் கோலோச்சி வந்தார்.
\
அப்போது புனர்வாழ்வு >துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சர் இந்த அஷ்ரப். நான் அப்போது வீரகேசரி நிருபராக இருந்த காலம் அது.
அட்டாளைச்சேனையில் ஆரம்பகால SLMC ஆதரவாளர் U.M.வாஹிட் ஆசிரியர் (இவர் பட்டதாரி ஆசிரியர்) எல்லோரும் அவரை வாஹிட் மாஸ்டர் என்றுதான் அன்று தொட்டு இன்று வரை ஊரில் அழைப்பது. இவர் இப்போது நசீர் MP யின் பிரைவட் செயலாளர்.
அட்டாளைச்சேனையில் SLMC மத்திய குழு என்று இந்த வாஹிட் மாஸ்டர் முன்னாள் அமைச்சர் உதுமாலப்பை .மற்றும் வாஹிட் மாஸ்டர் சகலன் அபூசாலி ..இவர்களுடன் நானும் சும்மா சேர்ந்து கொள்வேன்.இவர்கள் கொழும்பு சென்றால் அங்கு செலவு தொட்டு ஊர் திரும்பும் வரை செலவு நான்தான்.இவர்கள் கொழும்பு செல்லும் போது நான் இல்லாமல் போனது குறைவு .
அப்போது அபூசாலிக்கு அமைச்சர் அஷ்ரப் ஒரு வெள்ளை லேன்ட் ரோவர் ஜீப் கொடுத்திருந்தார் அதில்தான் பயணிப்போம்.
நானும் வாஹிட் மாஸ்டரும் அப்போது மிகவும் நெருக்கம் இப்போது கண்டால் பேசுவது கதைப்பது.அது அரசியல் ரீதியான் நெருக்கம் .
இப்போது இந்த நன்றி இதுகளுக்கு எங்கு இருக்கபோவுது.
வாஹிட் மாஸ்டருக்கும் அமைச்சர் அஷ்ரப்புக்கும் மிகவும் நெருக்கம் அஷ்ரப்பிடம் வாஹிட் மாஸ்டர் எது கேட்டாலும் கிடைக்கும் நிலை
இந்த ஒரு நிலையில் வாஹிட் மாஸ்டருக்கு அம்பாறை கச்சேரியில் புனர்வாழ்வு புரமைப்பு அமைச்சின் உதவி பணிப்பாளர் பதவி கிடைக்கின்றது.
இந்தப் பதவி அமைச்சர் தனது தனிப்பட்ட அதிகாரத்தின் கீழ் அமைச்சரின் கடிதத்துடன் இந்த நியமனம் வழங்கப்படுகின்றது.
ஆனால் இந்தப் பதவி என்பது SLAS தரம் கொண்டது .ஆனால் அமைச்சர் அஷ்ரப் தனது தனிப்பட்ட அதிகாரத்தின் கீழ் கொடுத்துள்ளார் .அந்த நேரம் அமைச்சர் அஷ்ரப்பிற்கு எதிராக யாரும் வாய் திறக்க முடியாது .ஏன் என்று கேட்கவும் முடியாது.
அப்போது வாஹிட் மாஸ்டர் தனது ஆசிரியர் பதவியில் இருந்து Asst. Director பதவிக்கு சென்று விட்டார் ..நானும் கொழும்புக்கு இடம் பெயர்ந்து விட்டேன் .
ஒரு முறை ஊர் வந்த போது 1999 நடுப்பகுதி என்று நினைக்கிறேன் வாஹிட் மாஸ்டரைக் கண்டு அஸ்ரப்பின் உசிர் ஊசலாடுகின்றது சேர் நீங்கள் உங்கள் உதவிப் பணிப்பாளர் பதவியை அமைச்சரவில் போட்டு அமைச்சரவை அப்புர்வால் Approval எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன் .
அப்போது வாஹிட் மாஸ்டர் சிரித்துக் கொண்டார் .அந்த சிரிப்பின் அர்த்தம் அய்யோ நம்மளுடன் கிடந்த பொடிப்பயல் எப்போது துப்பறியும் ஜேம்ஸ்பாண்ட் ஆனார் என்ற மாதரி இருந்தது எனக்கு .
நானும் ஒன்றும் பேசாமல் மவனே காலம் பதில் சொல்லும் என்று நகர்ந்து விட்டேன்.
உசிர் ஊசலாடுகின்றது என்றால் எந்த நிமிடமும் அஸ்ரப் இறக்கப் போகின்றார் என்று அர்த்தம் .
மீண்டும் அதே ஆண்டில் 1999 செப்டம்பர் என்று நினக்கின்றேன் அதே பல்லவி அஸ்ரப்பின் உசிர் ஊசலாடுகின்றது சேர் நீங்கள் உங்கள் உதவிப் பணிப்பாளர் பதவியை அமைச்சரவில் போட்டு அமைச்சரவை அப்புர்வால் எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன். இல்லை என்றால் நீங்கள் மீண்டும் உங்கள் ஆசிரியர் பதவிக்கு வரணும் என்றேன்.
அப்போதும் வாஹிட் மாஸ்டர் அதே நக்கல் நையாண்டி சிரிப்பு .அந்த சிரிப்பின் அர்த்தம் ஆமா இவரு பெரிய ஆளு நமக்கு ஆலோசனை ..என்ற மாதரியும் இருந்தது . நானும் ஒன்றும் பேசாமல் மவனே காலம் பதில் சொல்லும் என்று நகர்ந்து விட்டேன்.
அதன் பிற்பாடு நான் 1999 அக்டோபர் கடைசியில் லண்டன் போய்விட்டேன். வாஹிட் மாஸ்டருடன் தொடர்பு சந்திப்பு எதுவுமே இல்லை.
நான் லண்டன் இருந்து ஒரு சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு அதாவது 16-09-2000 ஆம் திகதி கொழும்பை அடைந்த போது வனொலியில் சிறப்பு செய்தி அரநாயக்க பகுதியில் அமைச்சர் அஷ்ரப் அம்பாறை நோக்கி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அமைச்சர் உட்பட விமான ஓட்டி அத்தனை பேரும் மரணித்து விட்டதாக அந்த செய்தி காற்றலையில் கலந்தது .மிகப்பெரிய கவலை ஒரு பக்கம் .
ஆனால் நமது தேடல் சரியா பிழையா என்பது இந்த வாஹிட் மாஸ்டருக்கு மட்டுமே தெரிந்த உண்மை .
ஆனாலும் வாஹிட் மாஸ்டர் அதை சும்மா விட்டுவிட்டார் .
அதன் பின்னர் 2001 ஆம் ஆண்டு வாஹிட் மாஸ்டரை ஊரில் கண்டு என்ன அஸ்ரப்பின் உசிர் ஊசலாடுகின்றது என்றதை நீங்கள் நக்கல் நையாண்டியாக நினைதிருப்பீர்களே என்று ஒப்புவித்தேன். அப்போதும் அந்த சிரிப்புத்தான்.
இவர்கள் ஒரு போதும் நமது தேடலை ஏற்றுக் கொண்டவர்களாக இல்லை.அந்தளவு இவர்கள் மனம்.
20 வருடங்கள் கடந்து விட்டது இவர்கள் மனம் இப்டித்தான் என்பதால் நாம் நமது தேடலை விட முடியுமா ?
ஈஸ்டர் குண்டு வெடிப்பின் போது இது நன்கு திட்டமிட்டு மகிந்தர் அணியால் செய்யப்பட்டது என்றும் கோத்தாவின் வெடிப்பு என்றும் 3 வெளிநாட்டு மீடியாவுக்கு நேர்காணல் கொடுத்துள்ளேன்.
இப்போது முன்னாள் ராணுவ தளபதி சேனநாயக்க போட்டு உடைத்து விட்டார்.
இந்தக் குண்டு வெடித்த பின்னர் 1 வாரம் கடந்து அமைச்சர் ரிசாத்துடன் மிகவும் நெருக்கமாகவுள்ள கிண்ணியா பிரதி அமைச்சர் மஹருப்பின் PRO நண்பர் நிசார்தீன் என்பவருடன் சொன்னேன் உங்கள் அமைச்சர் ரிசாத்தை வடகிழக்கு தவிர்ந்து சிங்கள் பகுதிக்கு போக வேண்டாம் இதை உங்கள் அமைச்சரிடம் சொல்லுங்கள் என்றேன்.
ஆனால் அவர் சொன்னாரோ இல்லையோ நான் சொல்லிய பின்னர் அண்மையில் சிங்கள பகுதிக்கு சென்ற அமைச்சரை சிங்கள மக்கள் கத்திக் கூக்குரல் இட்டு திருப்பி அனுப்பப்பட்டாரா இல்லையா ?
நாம சொன்னால் இவைகளுக்கு தூசு .நீங்க எக்கேடாவது கெட்டுப் போங்க .எனக்கென்ன.. வந்திடப் போகுது .
அடுத்த பதிவில் ஒரு எதிர்வு கூறல் ஒன்று பதிவு செய்வோம் ..