பாரளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ஸ
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்ப்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரமொன்று கல்முனையில் நேற்று(22)இடம்பெற்றது .
முன்னாள் உயர்கல்வி பிரதி அமைச்சர் மையோன் முஸ்தபா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது கலந்து கொண்ட பாரளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இவ்வாறு தெரிவித்தார் .
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்
உங்களுக்கு தெரியும் உங்கள் பிரதேசங்களில் 2015 பின் அபிவிருத்தி தடைபட்டுள்ளது என்பது அதற்கு காரணம் ஹக்கீம் மற்றும் றிசாத் பதியுதீன் ஆகியோர் ஆகும். இவர்களின் கட்சிகள் இந்த அரசாங்கத்தில் இருந்து கொண்டு முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் பற்றி அவர்கள் அக்கறை கொள்ளாமல் உள்ளனர் அவர்கள் உங்கள் வாக்குகளை பெற்று அவர்களின் விடயங்களில் மாத்திரம் கவனம்செலுத்திக்கொண்டிருக்கின்றனர்.
முஸ்லிம் மக்களுக்காக பல வேலைத்திட்டங்கள் செய்தவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களே
யுத்தம் முடிவு பெற்ற பின்னர் இங்குள்ள பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து அங்குள்ள பிரச்சினைகளை தீர்த்து வைத்தார்.
மேலும் நாட்டில் அனைத்து பள்ளிவாசல்களுக்கு ஐந்து வேளை ஒலிபெருக்கியில் பாங்கு சொல்ல அனுமதியளித்ததும் எமது ஆட்சியில்தான் இன்று இங்குள்ள அரசியவாதிகள் அவர்களின் சுய இலாபத்திற்காய் அரசியல் செய்கின்றனர் .அதன் காரணமாக இன்று உங்களுக்கு தேசியகட்சியுடன் இணைந்து அரசியலில் ஈடுபட வேண்டியுள்ளது .கடந்த கால அரசியல் வரலாற்றை எடுத்துக்கொண்டால் முஸ்லிங்கள் தேசிய ரீதியாகவே அரசியலை மேற்க்கொண்டனர் .
மீண்டும் நீங்கள் இவ்வாறான அரசியலில் சேர வேண்டிய கால கட்டம் ஏற்ப்பட்டுள்ளது.அதற்காக நான் அழைப்பு விடுக்கிறேன் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் .இதன் மூலம் உங்கள் பிரதேசங்களில் சிறந்த அபிவிருத்தியை மேற்கொள்ள முடியும் என்றார்.