கொழும்பு மத்தி ஹிந்துக் கல்லுாாிக்கு மேல் மாகாணசபை உறுப்பிணா் கே. குருசாமி அவா்களின் மேல்மாகண சபையின் நிதி ஒதுக்கிட்டின் கீழ் 85 இலட்சம் ருபா செலவில் கொழும்பில் முதன் முதலாக குளிருட்டப்பட்ட கூட்ட மண்டபம் ஒன்று புனா் நிர்மாணிக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மேல் மாகாண சபையின் முதலமைச்சா் இசுரு தேவப்பிரிய. அமைச்சா் மனோ கனேசன், கொழும்பு மாநகர சபை உறுப்பிணா்கள், கல்லுாாி அதிபா் பத்ம ரஞ்சன் மற்றும் ஆசிரியா்கள், பெற்றாா்கள் கல்வி அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.
மேல் மாகாணத்தில் சகல வசதிகளுடனும் குளிருட்டப்பட்ட கூட்ட மண்டபம், திரை, மேடை மல்டி மீடியா, ஒலிபெருக்கி, கழிவரை போன்ற வசதிகள் இங்கு செய்யப்பட்டுள்ளன. ஏனைய பாடசாலைகளில் தணியாா் வா்த்தகா்கள் இவ்வாறான குளீருட்டப்பட்ட கூட்ட மண்டபங்களை நிர்மாணித்துக் கொடுத்துள்ளாா்கள். ஆனால் தமிழ் பாடசாலைகளில் இவ்வாறான வசதி இல்லை. என அங்கலாய்பட்டு இன்று தான் அந்த கனவு நினைவேறியது என மேல் மாகாண சபை உறுப்பிணா் கே. குருசாமி தெரிவித்தாா்.