முஸாதிக் பொறியியல் துறையில் இலங்கையின் முதலாவது முஸ்லிம் சிரேஷ்ட பேராசிரியர்



பேராசிரியர் ஏ.எம். முஸாதிக் 2024 நவம்பர் 1 முதல் சிரேஷ்ட பேராசிரியர் பதவி உயர்வு

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் பேராசிரியர் ஏ.எம். முஸாதிக் அவர்கள், 2024 நவம்பர் 1ஆம் திகதி முதல் சிரேஷ்ட பேராசிரியராக (Senior Professor) பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இந்த பதவி உயர்வின் மூலம், அவர் இலங்கையில் பொறியியல் துறையில் சிரேஷ்ட பேராசிரியர் பதவியை அடைந்த முதலாவது முஸ்லிம் கல்வியாளர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

எந்திரவியல் பொறியியல் துறையில் சிறப்பாகப் பணி ஆற்றும் பேராசிரியர் முஸாதிக் அவர்கள், பல்வேறு உள்ளூர் மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்களில் கற்பித்தல், ஆராய்ச்சி, நிர்வாகப் பொறுப்புகள் உள்ளிட்ட துறைகளில் தனது பங்களிப்புகளைச் செய்துள்ளார்.

அவர் வெளியிட்ட பல்தரப்பட்ட சர்வதேச ஆராய்ச்சி கட்டுரைகள், சமூக மேம்பாட்டிற்கான பங்களிப்புகள் மற்றும் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கிய வழிகாட்டுதல்கள் இவரது கல்விசார் பயணத்தை சிறப்பாக மாற்றியுள்ளன.

“இலங்கையில் முஸ்லிம் சமூகத்திலிருந்து பொறியியல் துறையில் சிரேஷ்ட பேராசிரியர் பதவியை அடைவது இதுவே முதல்முறையாகும். இது சமூகத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் ஒரு நிகழ்வு” என கல்வி வட்டாரங்கள் பாராட்டின.

இந்த மகத்தான சாதனைக்காக பேராசிரியர் முஸாதிக் அவர்களுக்கு கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் சமூகத்தினர் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. “இது அவரது அசைக்க முடியாத உழைப்பிற்கும் கல்விசார் அர்ப்பணிப்பிற்குமான சான்றாகும். எதிர்கால கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகளில் மேலும் உயரங்களை எட்டுவாராக” என தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகம் வாழ்த்துக்ளைத் தெரிவித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :