கொழும்பு நகரின் வணிக மையங்களில் ஒன்றாக விளங்கும் புறக்கோட்டை 2ஆம் குறுக்கு வீதி இலக்கம் 75–ல் அமைந்துள்ள “கலர்ஸ் டைம்” தனியார் கைமணிக்கூடுகள் விற்பனை நிலையம் 24.09.2025 அன்று சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வை நிறுவன உரிமையாளர், தொழிலதிபர் மற்றும் அகில இலங்கை சமாதான நீதவான் அபூ உபைதா முஹம்மத் இப்திகார் அவர்கள் திறந்து வைத்தார். அவர் பதுளை அளுத்பத்த முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவராகவும், தற்போது கொழும்பில் மேற்படிப்பு மேற்கொண்டு வர்த்தகத் துறையில் சிறந்து விளங்குபவராகவும் பரவலாக அறியப்படுகிறார்.
விழாவிற்கு பிரதம அதிதியாக முன்னாள் பிரதியமைச்சரும் பிரபல நடிகருமான ரஞ்ஞன் ராமநாயக்க கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் அவரது அண்ணன் புஷ் அவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்று புதிய வணிக நிலையத்தின் ஆரம்பத்தை வாழ்த்தினர்.
நிறுவன உரிமையாளர் தனது உரையில், “உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கைமணிக்கடிகாரங்கள், சுவர்க்கடிகாரங்கள் விற்பனையில் எங்கள் நிறுவனம் பல ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. இப்போது அந்த வணிகத்தை மேலும் விரிவுபடுத்துவதற்காக இந்த புதிய விற்பனை நிலையத்தை திறந்துள்ளோம். தரமும் நம்பிக்கையும் எங்கள் நிறுவனத்தின் முதன்மை அடையாளம்” எனக் கூறினார்.
நிகழ்வில் பல்வேறு வணிகத் துறை நிபுணர்கள், இப்திகார் அவர்களின் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் பகுதி மக்கள் பலரும் பங்கேற்று புதிய நிலையத்தின் ஆரம்பத்தை வாழ்த்தினர்.
உயர்தர சுவர்க்கடிகாரங்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் விற்பனையில் தனித்துவம் பெற்ற “கலர்ஸ் டைம்”, இந்நிகழ்வின் மூலம் வணிகத்தை விரிவுபடுத்தியதோடு, வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்கும் நோக்கத்தையும் வலியுறுத்தியுள்ளது.

0 comments :
Post a Comment