சிறுவர் தினம் தொடர்பிலான மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிபர் இல்லியாஸ், உலக சிறுவர் தினம் தொடர்பான விஷேட சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தினார்.
அதிபர் எம். ஐ. எம். இல்லியாஸ் அவர்கள் சிறுவர் தினம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த போது, உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படும் இந்நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
அவர் உரையில் குறிப்பிட்டதாவது:
சர்வதேச சிறுவர் தினம் 1954 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 உலகின் பல நாடுகளில் சிறுவர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
1989 ஆம் ஆண்டு குழந்தைகள் உரிமைகள் குறித்த ஐ.நா. ஒப்பந்தம் (UNCRC) ஏற்றுக்கொள்ளப்பட்டு, குழந்தைகளின் உயிர், வளர்ச்சி, பாதுகாப்பு, கல்வி, பங்கேற்பு உரிமைகள் உறுதிசெய்யப்பட்டன.
உலகின் எதிர்காலம் குழந்தைகளின் கைகளில் உள்ளது. அவர்களை அன்பு, நல்லொழுக்கம், கல்வி, ஆரோக்கியம் ஆகியவற்றால் வளர்ப்பதே சமூகத்தின் பொறுப்பு.
“குழந்தைகள் இன்றைய குடிமக்கள் அல்ல; நாளைய தலைவர்கள் மட்டுமல்ல; அவர்கள் இன்று கூட அவர்களின் உரிமைகளை அனுபவிக்க வேண்டியவர்கள்” என்று வலியுறுத்தினார்.
சிறுவர்களின் திறமைகளை ஊக்குவித்து, அவர்கள் கனவுகளை நிறைவேற்ற வழிவகை செய்வதே பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமுதாயத்தின் கடமை என்றும் அவர் வலியுறுத்தினார்.
நிகழ்வில் மாணவர்கள் ஆசிரியர்களால் மாலையிட்டு இனிப்புகள் வழங்கி வரவேட்க்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்கள், பகுதித்தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்று, சிறுவர் தினத்தின் உலகளாவிய செய்தியையும் சமூகப் பொறுப்பையும் உணர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்கள், பகுதித்தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்று, சிறுவர் தினத்தின் உலகளாவிய செய்தியையும் சமூகப் பொறுப்பையும் உணர்ந்து கொண்டனர்.
.jpg)
0 comments :
Post a Comment