இந்த மகிழ்வான தருணத்தை முன்னிட்டு ஊடகத் துறையுடனும் ஊடகவியலாளர்களுடனும் நெருங்கிய உறவை பேணிவரும் புரவலர் ஹாஷிம் உமர் தனது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
அவரது வாழ்த்துச் செய்தியில்,
*“ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கடந்த பல தசாப்தங்களாக நாட்டின் ஊடகத் துறையில் முஸ்லிம் சமூகத்தின் குரலை வலுப்படுத்தி, அவர்களின் உரிமைகளுக்காக பாடுபட்டு வந்துள்ளது. இந்நேரத்தில், புதிய நிர்வாகத்தின் தெரிவு ஊடகத்துறையின் ஒற்றுமையையும், ஊடகவியலாளர்களின் அந்தஸ்த்தையும் மேம்படுத்தும் வகையில் அமையும் என நம்புகிறேன்.
நாடளாவிய ரீதியில் பரந்துபட்ட முஸ்லிம் ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்து, அவர்களை வலுப்படுத்தி, நாட்டுக்கும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கும் எதிராக வீசப்படும் சவால்களை தகர்த்தெறியவும் புதிய நிர்வாகம் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.
புதிய பொறுப்பில் அல்லாஹ் நிறைந்த வெற்றிகளையும் வழிகாட்டுதலையும் அருள்வானாக!”* என்று குறிப்பிட்டுள்ளார்.

0 comments :
Post a Comment