இன்று வித்தியாரம்பம்.வித்யாரம்பம் என்பது ஒரு இந்து சமய சடங்காகும். இது பாரம்பரியமாக விஜயதசமி நாளில் செய்யப்படுகிறது.

இம்முறை இந்த பாரம்பரிய சடங்கை நேற்று இடம்பெற்ற விஜயதசமியில் செய்வதை விட இன்று(26)திங்கட்கிழமை செய்வதே பொருத்தமாகும் என ஜோதிடர்களும் இந்துமதகுருக்களும் கூறியுள்ளனர். சர்வதேச இந்துமத பீடாதிபதி உள்ளிட்ட பல குருக்கள்மார் கூறியுள்ளனர்.
இந்துக்களின் ஏடுதொடங்கும் வித்தியாரம்ப நிகழ்வு செய்வதற்கு இன்று(26) திஙகட்கிழமை காலையே பொருத்தமாகும் என கிழக்கின் பிரபல குருக்களான காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மனாலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸவரக்குருக்கள் தெரிவிக்கிறார்.

வழமையாக விஜயதசமியில் வித்தியாரம்பம் முதல் தொழில்ஆரம்பித்தல் முதலான சுப கருமங்கள் செய்வது வழமை. இந்த சார்வரி வருடத்தில் நவமி என்பது நேற்று ஞாயிற்றுக்கிழமை பி.ப.12.16வரை நிற்பதனால் அக்காலத்துள் வித்தியாரம்பம் செய்வது பொருத்தமல்ல.

பொதுவாக அட்டமி நவமி காலத்துள் நல்லகாரியங்களை ஆரம்பிக்கமாட்டார்கள். இது இந்துக்களின் மரபு.எனவே தசமியில் செய்வது நல்லது. தசமி நேற்று 12.17க்கு ஆரம்பித்தாலும் பின்னேர வேளைகளில் வித்தியாரம்பம் செய்வதில்லை. எனவே இன்று (26) திங்கட்கிழமை 12மணிக்கு முன்பதாக காலைவேளையில் வித்தியாரம்பம் செய்வது நல்லது . அதுவே பொருத்தமாகும். என்கிறார்.
சரி இனி வித்தியாரம்பம் பற்றி பார்ப்போம்..

வித்யாரம்பம் விழாவானது ( வித்யா என்றால் 'அறிவு' ஆரம்பம் என்றால் 'துவக்கம்') கோயில்களிலும் வீடுகளிலும் பாடசாலைகளிலும் நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நாளில் கோயில்களுக்கு வந்து தங்கள் குழந்தைகளை கற்றலில் ஈடுபடுத்துவது வழக்கம் .
எழுதத் துவக்கும் சடங்கின்போது பொதுவாக மந்திரத்தை எழுதி துவங்கப்படுகிறது. குழந்தைகள் தமிழெழுத்தை ஆரம்பிக்கும்போது 'ஓம்' என்றோ 'அ' என்றோ துவங்குவது வழக்கம் .
இந்த சடங்கின்போது ஒரு குருவின் முன்னிலையில் மந்திரமானது மணல் அல்லது அரிசி பரப்பப்பட்ட தட்டில் குழந்தையின் விரல் பிடித்து எழுதப்படுகிறது. பின்னர் குருவானவர் குழந்தையின் நாக்கில் மந்திரத்தை தங்கத்தைக் கொண்டு எழுதுகிறார்.

மணலில் எழுதுவது நடைமுறையை குறிக்கிறது. தானியங்களில் எழுதுவது அறிவைப் பெறுவதைக் குறிக்கிறது. இது செழிப்பைக் குறிக்கிறது. தங்கத்தைக் கொண்டு நாக்கில் எழுதுவது கல்விக் கடவுளின் அருளைக் குறிக்கிறதுஇ இதன் மூலம் ஒருவர் உண்மையான அறிவுச் செல்வத்தை அடைவதாக கருதப்படுகிறது.

இப்போதெல்லாம் வித்யாரம்பம் விழாவானது அனைத்து சாதிகள் மற்றும் சமயத்தைச் சேர்ந்தவர்களால் கொண்டாடப்படுகிறது. சடங்குகளில் சிறிய வேறுபாடுகள் உள்ளன.

இந்த நாளில் குழந்தைகளுக்கு முறையாக இசை நடனம் மொழிகள் நாட்டுப்புற கலை போன்றவை கற்பிப்பது துவக்கப்படுகிறது.

இது குழந்தைகளுக்கு எழுத்துக்களை கற்பிக்கும் விழாவை உள்ளடக்கியது.
விஜயதசமி நாள் என்பது நவராத்திரி விழாவின் பத்தாவதும் இறுதி நாளுமாகும். இந்த நாளானது எந்தத் துறையிலும் கற்றலைத் தொடங்க நல்ல நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் கற்றலின் துவக்க விழாவானது ஆயுத பூஜை சடங்குடன் நெருங்கிய தொடர்புடையதாக உள்ளது.
வழக்கமாக விஜயதசமி நாளில்தான் பூஜைக்காக வைக்கப்பட்ட கருவிகள் மீண்டும் பயன்படுத்தப்பாட்டுக்கு எடுக்கப்படுகிறன்றன.

கல்வி தெய்வமான சரசுவதி மற்றும் ஆசிரியர் (குரு) ஆகியோருக்கு குரு தட்சணை கொடுத்து மரியாதை செய்ய வேண்டிய நாளாக இது கருதப்படுகிறது.
குருதட்சினையானது வழக்கமாக வெற்றிலை பாக்கு சிறிது பணம் ஒரு புதிய துண்டு - ஒரு வேட்டி அல்லது சேலை ஆகியவற்றைக் கொண்டுள்ளதாக இருக்கும்.

வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர்


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :