இந்த சந்திப்பில் கட்சியின் உயர்சபை உறுப்பினர்களான முஹம்மது ரபீக், ஏ. எம். ஸக்ரான், முஹம்மத் ரஷாத், செயளாளர் இர்பான் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.
கூட்டத்தில் கட்சியின் எதிர்கால முன்னேற்றத்தையும், நாட்டின் தற்போதைய அரசியல் சூழலையும் விவாதித்ததுடன், பின்வரும் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன:
மன்னாரைச் சேர்ந்த முஹம்மது சதீக் முப்தி அவர்கள், கட்சியின் உபத் தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் சபையின் அனைத்து உறுப்பினர்களாலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதி அநுர குமாரா வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை பாராட்டி, அவருக்கு நன்றிக்கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
பெண்களின் கல்வி, உரிமை மற்றும் சுதந்திரத்தை வலுப்படுத்தும் நோக்கில், நாட்டில் பெண்களுக்கான தனித்துப் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள், இத்தீர்மானங்கள் கட்சியின் நிலைப்பாட்டையும் சமூகத்திற்கான அர்ப்பணிப்பையும் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டனர்.
கட்சியின் செயளாளர் இர்பான் முஹிதீன் இவ்வாறு ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
.jpg)

0 comments :
Post a Comment