இச்சம்பவத்தை அடுத்து இலங்கை உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் முப்தி ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
"உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கு எங்கள் கட்சி சார்பிலும் எனது தனிப்பட்ட முறையிலும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோன். இந்த துயரச் சம்பவம் தமிழ்நாட்டின் மக்களை ஆழமான சோகத்தில் ஆழ்த்தியுள்ளது."
மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற நெரிசல்மிக்க கூட்டங்கள் ஏற்படாதபடி பொது இடங்களில் தாய்மார்களும் குழந்தைகளும் கலந்து கொள்ளக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கரூர் நெரிசல் சம்பவத்தின் உண்மையான காரணங்கள் விரைவில் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி மருத்துவமனைகளில் துயர் துடைப்புப் பணிகள் நடந்து வருகின்றன.
இலங்கை உலமா கட்சி, பொதுமக்கள் பாதுகாப்பையும், குழந்தைகள் பாதுகாப்பையும் முன்னிலைப்படுத்தி, எதிர்கால பொதுக் கூட்டங்களில் அரசு இதை கடைபிடிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.

0 comments :
Post a Comment