தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் “SRF QUIZ LEAGUE 2025” – கலைப் பீட அணிகள் சாம்பியன், ரன்னர்-அப்!



தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழி பீட சமூக ஆய்வுகளுக்கான மாணவர் ஆய்வு மன்றத்தின் ஏற்பாட்டில், “SRF QUIZ LEAGUE 2025” வினாடி வினா போட்டி கடந்த 23ஆம் திகதி இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மாணவர்களின் அறிவாற்றல், வேகமான சிந்தனை திறன் மற்றும் போட்டியாட்ட உணர்வை வெளிப்படுத்திய இப்போட்டியில், பல்வேறு பீடங்களைச் சேர்ந்த மொத்தம் 20 அணிகள் பங்கேற்றன. கடுமையான போட்டியிடலின் பின்னர், கலை மற்றும் கலாசார பீடத்தைச் சேர்ந்த “Cerebral Squad” அணி சாம்பியனாகவும், அதே பீடத்தைச் சேர்ந்த “Dream Chasers” அணி ரன்னர்-அப் ஆகவும் தெரிவானது.

இந்நிகழ்வில், சமூக ஆய்வுகளுக்கான மாணவர் ஆய்வு மன்றத் தலைவர் எம்.எஸ்.எம். சஜ்ஜாத் தலைமையேற்றிருந்தார். பீடத்தின் பதில் பீடாதிபதி கலாநிதி ஏ.எம். றாசிக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியதுடன், வெற்றியடைந்த மாணவர் குழுக்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

சமூக ஆய்வு மன்றத்தின் பொருளாளர் கலாநிதி ஏ.எச். றிபாஸ் உரையாற்றியதுடன், செயலாளர் ஏ.ரீ.எம். தஸ்னீம் நன்றி உரையையும் நிகழ்வில் வழங்கினார்.

போட்டியின் நடுவர் குழுவில் சிரேஷ்ட விரிவுரையாளர் எச்.எம். அஹமட் ஹில்மி, சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ். இஸ்ஸத் நிம்சாத், விரிவுரையாளர் எம்.எஸ். இஸ்மியா வேகம், மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எஸ். பாத்திமா நிஸ்பா ஆகியோர் பங்கேற்று தமது சிறப்பான பங்களிப்புகளை வழங்கினர்.

மேலும், முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீட பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா, பல விரிவுரையாளர்கள், உதவி விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பங்களிப்பு வழங்கிய அனைவருக்கும் சமூக ஆய்வு மன்றம் சார்பாக இதயப்பூர்வ நன்றிகள் தெரிவிக்கப்பட்டன. அதேவேளை, சாம்பியனான Cerebral Squad மற்றும் ரன்னர்-அப் பட்டம் பெற்ற Dream Chasers அணிகளுக்கு மன்றம் சார்பாக வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டன.

























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :