முஸ்லிம் இளைஞர் சமூக ஆய்வு அமைப்பின் விருது வழங்குதலும் இப்தார் நிகழ்வும்!!!

எம்.வை.அமீர்- 
மூகநல திட்டங்களை இளைஞர்களின் பங்களிப்புடன் முழுவீச்சில் பிராந்தியத்தில் நடைமுறைப்படுத்தி வரும் MYSRO என்று அழைக்கப்படும் முஸ்லிம் இளைஞர் சமூக ஆய்வு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த அமைப்பில் நான்கு வருடங்களைப் பூர்த்தி செய்துள்ள அங்கத்தினர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வும் வருடாந்த இப்தார் நிகழ்வும் தலைவர் இஸ்மாயில் இக்தார் தலைமையில் மாளிகைக்காடு விஸ்மில்லா உணவக கேட்போர் கூடத்தில் 2018-06-04 ஆம் திகதி இடம்பெற்றது.
அமைப்பின் செயலாளர் எம்.எம்.சுஜாவின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீலின் பிரத்தியோக செயலாளர் முனாஸ் முகைடீன் கலந்துகொண்டிருந்தார்.அதிதிகள் வரிசையில் சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி திட்டமிடல் அதிகாரி எம்.ஐ ஜௌபர் மற்றும் சிரேஷ்ட கிராமசேவை உத்தியோகத்தர் ஏ.எம்.நிஸ்ரின் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் அஷ் செய்க் அல் ஹாபிழ் ஏ.எம்.ஏ.ஆரீப் (அஸீஸி) அவர்கள் மார்க்க சொற்பொழிவாற்றினார். பின்னர் அமைப்பில் நான்கு வருடங்களைப் பூர்த்தி செய்த உறுப்பினர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வும் இப்தார் நிகழ்வும் இடம்பெற்றது.





















எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -