கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ஏ. எல்.எம் . றிபாஸ் (அலறி) அவர்களின் தேர்தல் வாக்குறுதிக்கு அமைவாக தனது மாதாந்த கொடுப்பனவை சமூக அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் சமூக வேலைத்திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும் எனும் உறுதிமொழிக்கு அமைவாக இன்று தனது மாதாந்த கொடுப்பனவை மிமா(MIMA) சமூக சேவை அமைப்புக்கு வழங்கிவைத்தார்.
இன்றைய தினம் மருதமுனை கமு/ அல்-மதீனா வித்தியாலய மண்டபத்தில் இம்பெற்ற மிமா அமைப்பின் வருடாந்த இப்தார் நிகழ்வை தொடர்ந்து இந்த நிதி கையளிப்பு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் கௌரவ காத்தமுத்து கணேஷ், சமூக சேவை அமைப்பின் பிரதிநிதிகள், பாடசாலை அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.