கத்தாரில் AMWAN இன் வருடாந்த இப்தார் நிகழ்வு

Al-Minhaj Welfare Association of Nikagolla (AMWAN) இன் வருடாந்த இப்தார் நிகழ்வு கடந்த 01.06.2018அன்று கத்தார் நாட்டின் Old Airport Park- இல் நடைபெற்றது. இதில் பெருமளவானோர் பங்கேற்றனர்.

அஷ்ஷெய்க் ஷஹீர் நளீமியின் நெறிப்படுத்தலோடு நடைபெற்ற இந்நிகழ்விற்கு அஷ்ஷெய்க் லரீப் (பலாஹி) தலைமை தாங்கினார்.

இதன்போது AMWAN உருவாக்கப்பட்டதன் நோக்கம், குறிக்கோள், செயற்பாடுகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்து தலைவர் அஷ்ஷெய்க் லரீப் (பலாஹி), உதவிச் செயலாளர் அஸாட் ஆகியோர் விளக்கமளித்தனர்.

AMWAN கடந்த 2010ஆம் ஆண்டு முதல் “கல்வியினூடாக முன்மாதிரிமிக்க கிராமம்” என்ற மகுடவாசகத்தை முன்னிறுத்தி ஊரின் கல்வி அபிவிருத்திக்காக உழைத்து வருகிறது. ஆறுபேருடன் ஆரம்பிக்கப்பட்ட இவ் அமைப்பு இன்று 120 அங்கத்தவர்களைக் கொண்டு இயங்கிவருகின்றது. நிககொள்ளை ஊரைச் சாராத சகோதரர்களும் இச்செயற்திட்டத்திற்குதொடர்ந்தேர்ச்சையாக பங்களிப்பு நல்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -