அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை. பாலம்பட்டாறு பகுதியில் உழவு இயந்திரத்தில் ஏற்றிச்சென்ற நெல் அறுவடை இயந்திரத்தின் இரும்பு பாகம் டிமோ பட்டா லொறியுடன் மோதியதில் இன்று (04) மாலை 6.30மணியளவில் 18பேர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கன்தளாய். ரஜஎல பகுதியிலிருந்து உயிரிழந்த நபரொருவரின் 01 வருட பூர்த்தியை முன்னிட்டு 05ம் கட்டை பகுதியிலுள்ள அநாதை சிறுவர் இல்லத்திற்கு இரவு சாப்பாடு வழங்குவதற்காக வந்து கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம் பெற்றுள்ளது.
மூன்று குடும்பங்களைச்சேர்ந்த 18 பேரில் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார். விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.