இந்தியத் தொழிலதிபர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை..!

எஸ்.ஹமீத்-
மெரிக்காவின் தெற்கு கரோலினாப் பிரதேசத்தின் லான்காஸ்டர் பகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் ஹார்னீஷ் பட்டேல் அவரது வீட்டுக்கு அருகாமையில் வைத்துத் துப்பாக்கிதாரி ஒருவரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கடந்த வாரம் இந்தியாவைச் சேர்ந்த பொறியியலாளரான 32 வயதுடைய ஸ்ரீனிவாஸ் சுட்டுக் கொல்லப்பட்ட சூடு தணிவதற்குள் மற்றொரு இந்தியர் கொல்லப்பட்டமை பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது.

கடந்த வியாழன் இரவு 11 .24 மணிக்குத் தனது கடையை மூடிய பத்து நிமிடங்களுக்குள் ஹார்னீஷ் பட்டேல் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்தக் கொலை இனவாதப் பின்னணியில் நடந்திருக்க வாய்ப்பில்லையென்று அதிகாரிகள் கருத்துத் தெரிவித்துள்ள போதும் கொலைக்கான காரணம் எதுவென இதுவரை தெரியவில்லை.

''இந்தக் கொலை இன துவேஷத்தின் அடிப்படையில் நடந்திருக்குமென நம்புவதற்கு என்னிடம் இந்தக் காரணங்களும் இல்லை.'' என்று பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸ் உத்தியோகத்தரான பெரி பைலே (Barry Faile) தெரிவித்துள்ளார். அத்தோடு, ''கொல்லப்பட்ட ஹார்னீஷ் பட்டேல் ஒரு சிறந்த மனிதர்.'' என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த பெப்ரவரி 22 ம் திகதி இந்தியரான கன்சாஸ் என்பவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவ்வேளை துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தியவன் ''எனது நாட்டை விட்டு வெளியேறு!'' என்று சத்தமிட்டுள்ளான்.

மேலும், டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் சிறுபான்மையினருக்கெதிரான வன்மமும் தாக்குதல்களும் என்றுமில்லாத அளவில் அதிகரித்து வருவதாக அவதானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -