எஸ்.ஹமீத்-
துபாயில் இருந்து நாடு திரும்பும் பயணிகளில் நீங்களும் ஒருவராயின் இந்தச் செய்தியைக் கவனமாகப் படியுங்கள். நீங்கள் விமானத்தில் கொண்டு வரும் லக்கேஜ்கள் எப்படியிருக்க வேண்டுமென்ற புதிய விதிமுறையை துபாய் விமான நிலைய நிர்வாகம் அமுல்படுத்த இருக்கிறது. இந்தப் புதிய விதிமுறை எதிர்வரும் மார்ச் 8, 2017 ல் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளது என்று துபாய் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சரியாகப் பொதி செய்யப்படாத பெட்டிகளால் ஏற்படும் நெரிசல் காரணமாக லக்கேஜ்களை எடுத்துச் செல்லும் பெல்டுகள் பழுதடைவதாகவும் இதனால் அதிக தாமதம் ஏற்டுவதாகவும் அதன் விளைவாக விமானங்கள் சரியான நேரத்திற்குப் புறப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியே விமான நிலைய அதிகாரிகள் இந்தப் புதிய விதிமுறையை அமுலுக்கு கொண்டு வரவுள்ளனர்.
புதிய விதிகளில் முக்கியமானவை இவை:
உங்கள் பொதிகள் ஒழுங்கான முறையில் கட்டப்பட்டிருக்க வேண்டும். ஒழுங்கற்ற விதத்தில் தாறுமாறாகக் கட்டப்பட்ட பொதிகளை விமானத்தில் இனி எடுத்துச் செல்ல முடியாது. வட்டமான வடிவத்திலான பொதிகளை எடுத்துச் செல்ல முடியாது. பொதிகள் யாவும் தட்டையாக அமைந்திருக்க வேண்டும். அதிக நிறையுடைய பொருட்களையும் நீங்கள் இனி எடுத்துச் செல்ல முடியாது.