காரைதீவு நிருபர் சகா-
இன்று 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் இளைஞர் பாராளுமனற்த்தேர்தலில் அம்பாறைமாவட்டத்தில் ஜந்து உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கு 68வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.
பொத்துவில் தேர்தல் தொகுதியில் 17பேரும் கல்முனைத்தேர்தல்தொகுதியில் 08பேரும் சம்மாந்துறைத்தேர்தல் தொகுதியில் 09பேரும் அம்பாறை தேர்தல்தொகுதியில் 34பேரும் மொத்தம் 68பேர் வேட்புமனுவைத்தாக்கல் செய்திருந்தனர்.
04தேர்தல் தொகுதிகளிலிருந்து 04உறுப்பினர்கள் இளைஞர் பாராளுமன்றிற்கு தெரிவுசெய்யப்படுவதோடு போனஸ் ஆசனமும் வழங்கப்படவுள்ளது என அம்பாறை மாவட்ட இளைஞர்சேவை அதிகாரி யு.எல்.ஏ.மஜீட் தெரிவித்தார்.