அம்பாரை மாவட்டத்தில் மனக்கோட்டை கட்டும் வன்னி வங்குறோத்து அரசியல் வாதி- நளீர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகாண முதலமைச்சர் விடயத்தில் எடுத்துள்ள முடிவானது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினை மேலும் கையோங்க செய்துள்ளது.
என நளீர் பவுண்டேசன் அமைப்பின் பணிப்பாளர் எம்.ஏ.நளீர் தெரிவித்தார்,
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், கடந்த வெள்ளிக்கிழமை சாய்ந்தமருதில் நடைபெற்ற அந்த ஆர்ப்பாட்ட சம்பவம் இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களை மட்டுமல்லாது வெளிநாட்டில் வாழும் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளின் மனதையும் புண்படுத்தியுள்ளது.

வங்குரோத்து அரசியலை செய்கின்ற வன்னி மாவட்ட அமைச்சர் ஒருவரும், குன்று சட்டிக்குள் குதிரை ஓடும் ஒரு எம்.பியும் இவ்விடயத்தை வைத்து அம்பாரை மாவட்டத்தில் அரசியல் காய்நகர்த்தலில் சந்தோமடைந்து மனக்கோட்டை கட்டிக் கொண்டிருக்கின்ற நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலை பெரும் தன்மையுடன் தடைகளை தளர்த்தி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் மீண்டும் உள்வாங்கியதையிட்டு இவர்களின் மனக்கோட்டைக்கு சாவுமணி அடிக்கப்பட்டுள்ளது.

சில வங்குரோத்து அரசியல் வாதிகள் சிறிய கிராமங்ளை இலக்கு வைத்து தற்போது அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இதை கவனத்தில் கொண்டு சிறிய கிராமங்களுக்கு அரசியல் அதிகாரங்ளை வழங்கி இன்னும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டும் என நளீர் பவுண்டேசன் அமைப்பின் பணிப்பாளர் எம்.ஏ.நளீர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -