கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களான ஸஹ்றியன்ஸ்-93/96 அமைப்பினரின் குடும்ப ஒன்று கூடல், சிறுவர் விளையாட்டு நிகழ்வுகளும்



எஸ்.அஷ்ரப்கான்-
ல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களான ஸஹ்றியன்ஸ்-93/96 அமைப்பினரின் குடும்ப ஒன்று கூடல் நிகழ்வு மாளிகைக்காடு பாபாரோயலி மண்டபத்திலே நேற்று (05) மாலை இடம்பெற்றது.

தொழிலதிபர் முஹம்மட் அஸ்வரின் வழி நடாத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுமார் 20 குடும்பங்களின் அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.

இங்கு சிறுவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், விளையாட்டு என பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகள் இடம்பெற்று அவர்களுக்கான பெறுமதிமிக்க பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு அனுசரணையாளர்களாக சாய்ந்தமருது ஹமீடியா ரேடிங் சென்டர் மற்றும் சாய்ந்தமருது சிங்கர் ஷோ றூம் அமைப்பினரும் அனுசரணை வழங்கியிருந்தார்கள்.

இங்கு பங்கு பற்றிய குடும்பங்களின் தலைவர்களில் குலுக்கல் முறைமூலம் தெரிவு செய்யப்பட்ட ஐவருக்கு பெறுமதியான பரிசில்களை சாய்ந்தமருது சிங்கர் ஷோ றூம் உரிமையாளர் எஸ்.எச். ஜிப்ரி வழங்கினார். அத்துடன் பங்கு கொண்ட அனைத்து குடும்பங்களுக்கும் நினைவுப்பரிசாக சாய்ந்தமருது ஹமீடியா ரேடிங் சென்டர் உரிமையாளர் எஸ்.எச்.கலீல் பெறுமதிமிக்க அன்பளிப்புக்களை வழங்கி வைத்தார்.

இங்கு இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன பிறை எப்.எம்.சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். நெளபீல் தலைமையில் பிறை எப்.எம்.அறிவிப்பாளர்
றம்ஸானா சமீல், ஏ.என்.எம்.ஜாவித் ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கியிருந்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :