தொற்றா நோய்களுக்கு மாற்றாக தற்போது அதிகரிப்பது – வாழ்க்கை முறையால் ஏற்படும் நோய்கள் : வைத்திய அதிகாரி டாக்டர் சனூஸ் காரியப்பர்.



ன்றைய சமூகத்தில் அதிகரித்து வரும் வாழ்க்கை முறையால் உண்டாகும் நோய்களின் தீவிரம் குறித்து உரையாற்றினார். கடந்த 25 வருட மருத்துவ அனுபவத்தின் அடிப்படையில், தற்போது சாய்ந்தமருது பிரதேசத்தில் சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரோல், இதய நோய், கிட்னி நோய், மூட்டு வலி, புற்றுநோய் போன்ற தொற்றா நோய்கள் பெருமளவில் அதிகரித்துள்ளதாக டாக்டர் சனூஸ் காரியப்பர் தெரிவித்தார்.

சமீபத்திய ஆய்வின் படி, சாய்ந்தமருது பிரதேசத்தில் வாழும் மக்களில் 79% பேருக்கு குறைந்தது ஒரு ஆபத்து காரணி காணப்படுவதாகவும், மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை நிலையங்கள் போதாமை நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சாய்ந்தமருது சமாதான நீதவான்களை உள்ளடக்கிய சமூக சேவை அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மருத்துவ பரிசோதனையும் அறிவூட்டல் நிகழ்வுகளையும் உள்ளடக்கிய மருத்துவ பரிசோதனை முகாம் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் அமைப்பின் தலைவர் பொறியளாளர் யூ.எல்.ஏ. அஜீஸ் தலைமையிலும் செயலாளர் எம்.எம். உதுமாலெப்பையின் வழிகாட்டலிலும் 2025.11.05 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்முனைப் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் தொற்றா நோய்கள் தடுப்புப் பிரிவின் பொறுப்பு வைத்தியர் எம்.ஐ.எம்.எஸ் இர்சாத் அவர்களும் கலந்து கொண்டு ஆரோக்கிய வாழ்வுக்கான உடற் பயிற்சிகள்,நாளாந்த நடைமுறைகள் பற்றி தெளிவு படுத்தினார் .

இங்கு தொடர்ந்து உரையாற்றிய டாக்டர் சனூஸ் காரியப்பர்,

நோய்களுக்கு “சிகிச்சை அளிப்பதை விட நோய் வராமல் தடுப்பதே உண்மையான தீர்வாகும்,” என்றும் தற்போது கல்முனை பிரதேசத்தில் ஆறு டயாலிசிஸ் இரத்த சுத்திகரிப்பு நிலையங்கள் இயங்குகின்றன என்றும் ஒவ்வொரு நிலையத்திலும் 80 முதல் 100 நோயாளிகள் வரை சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் ஒரு நோயாளியின் தனியார் சிகிச்சை செலவு மாதம் ரூ.02 லட்சம் வரை செலவாகிறது. “இது குடும்பங்களையும், சமூக பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கிறது,” என்றும் தெரிவித்தார்.

உடற்பயிற்சி குறைவு, ஒழுங்கற்ற உணவு பழக்கம், அதிக உப்பு பாவித்தல், மற்றும் எண்ணெய்பா பாவனை, உணவுகளில் இரவு நேர சாப்பாடு, புகைபிடித்தல் போன்றவை நோய்களின் முக்கிய காரணிகள் என அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு நபர் தினமும் அதிகபட்சம் ஒரு தேக்கரண்டி உப்பு (5 கிராம்) மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், காய்கறி மற்றும் பழங்கள் போதிய அளவில் உணவில் சேர்க்கப்படாத நிலை பெரும்பாலான குடும்பங்களில் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

ஆரோக்கியமான உணவு வழிமுறை – ஒரு தட்டு, ஆறு நாட்கள் திட்டம்
டாக்டர் சனூஸ் காரியப்பர் பரிந்துரைத்தார்:


• தட்டின் பாதி பகுதி காய்கறி மற்றும் இலைக்கறி,

• கால்பங்கு புரத உணவு (மீன், முட்டை, பயறு),

• மீதமுள்ள பகுதி கார்போஹைட்ரேட் (அரிசி, பருப்பு அரிசி) என அமைத்துக்கொள்ள வேண்டும்.


அவர் மேலும் கூறுகையில்

“வாரத்தில் ஒரு நாள் சிறு மீன், ஒரு நாள் பெரிய மீன், ஒரு நாள் chicken, ஒரு நாள் முட்டை, ஒரு நாள் உலர் மீன், ஒரு நாள் இறைச்சி, ஒரு நாள் வெஜிடேரியன் உணவு — இப்படியான பின்பற்றுதல் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த பலனை தரும்,” எனவும் தெரிவித்தார்..

சமூக உறவுகள் குறைவதாலும், குடும்ப உறவுகளில் மன அழுத்தம் அதிகரிப்பதாலும் stress மற்றும் depression நோய்கள் அதிகரித்து வருவதாகவும், இதுவும் உடல் நோய்களுக்கு வழிவகுக்கின்றது என்றும் அவர் எச்சரித்தார்.

இந்த விழிப்புணர்வு முயற்சியை MOH நிலை வரை விரிவுபடுத்தும் திட்டம் இருப்பதாகவும், சமூகத்தின் ஒற்றுமை மூலமாக “Preventive Care” முறைமையை வலுப்படுத்த முடியும் என்றும் டாக்டர் சனூஸ் தெரிவித்தார்.

“நோய் வந்த பிறகு சிகிச்சை கொடுப்பது தற்காலிக தீர்வு மட்டுமே;
நோய் வராமல் காப்பது தான் நிலையான தீர்வு,” எனவும் தெரிவித்தார்.

நிகழ்வின் போது சமாதான சாய்ந்தமருது சமாதான நீதவான்களை உள்ளடக்கிய சமூக சேவை அமைப்பினால் சாய்ந்தமருது பிரதேச வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் சனூஸ் காரியப்பர் பிராந்தியத்துக்கு ஆற்றிவரும் உயரிய சேவைக்காக அமைப்பினால் ஞாபக சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

சமாதான நீதவான்கள் தனித்தனியாக வைத்திய பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :