அவர் மேலும் கூறியதாவது:
“அண்மையில் ஞானசார தேரர் தனது பத்திரிகை மாநாட்டில் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடையணிவது பல பிரச்சினைகளை ஏற்படுத்தும், எனவே பொது இடங்களில் முகத்தை முழுமையாக மறைப்பது தடை செய்யப்பட வேண்டும்” என கருத்து தெரிவித்துள்ளார்.
“முகத்தை முழுமையாக மறைக்கக் கூடாது என்ற அவரது கருத்தை நாங்களும் ஏற்கிறோம். இதே கருத்தை 2006ஆம் ஆண்டு முதல் எங்களால் பகிரங்கமாக சொல்லி வருகிறோம்,” எனவும் அவர் குறிப்பிட்டார்.
முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கை, ஞானசார தேரரும் கூறியபோல தலையையும் மார்பையும் மூடும் முந்தானை (ஹிஜாப்) அணிவதற்கே என்பதையும், அதைத் தவிர முகத்தை மூடும் நிகாப் அல்லது புர்கா அணிவதற்கான கோரிக்கை எங்கிருந்தும் வரவில்லை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறினார்:
“முஸ்லிம் தாதியர்கள் முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடை அணிய வேண்டும் எனக் கேட்டதாக எங்கும் காணவில்லை. கேட்காத ஒன்றை கேட்டதாக கூறி தேரர் மக்கள் மத்தியில் பிழையான புரிதலை உருவாக்குகிறார்.”
“நிகாப் அணிவது குறித்தும் தவறான புரிதல்கள் உள்ளன. ஆனால் நிகாப் என்ற முகமூடி வடிவை கொரோனா காலத்தில் அரசாங்கமே கட்டாயப்படுத்தியது. அப்போது மாஸ்க் அணியாத ஆண்களும் பெண்களும் காவல்துறையால் எச்சரிக்கப்பட்டனர். அப்போது அது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததா?” என அவர் கேள்வி எழுப்பினார்.
“இன்றும் வைத்தியசாலைகளில் முஸ்லிம் அல்லாத வைத்தியர்களும் தாதியர்களும் கண்கள் மட்டும் தெரிவதுபோல் மாஸ்க் அணிவதை காணலாம். முகத்தை மூடுவது சட்ட விரோதம் என்றால், அவர்கள் அனைவரும் சட்டத்தை மீறியவர்களாக கருதப்பட வேண்டி வரும்,” எனவும் அவர் குறிப்பிட்டார்.
முஸ்லிம் பெண்கள் இன்று போலி ஹிஜாப் அணிந்து மார்பை மூடாமல் நடமாடுவது சமூகப் பிரச்சினையாக மாறிவருகிறது என்றும், உண்மையான ஹிஜாப் என்பது தலையையும் மார்பையும் மூடும் முந்தானை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் முப்தி முபாரக் அப்துல் மஜீத் வலியுறுத்தினார்.
“அந்த ஆடை இனவாதமாகக் கருதப்படாமல், பெண்மைக்குரிய கௌரவமான ஆடையாக இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது என்பதை சமூகம் அறிந்து கொள்ள வேண்டும்,” என அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment