திறமையான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு : மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீன் பிரதம அதிதியாக பங்கேற்றார்.



நூருல் ஹுதா உமர்-
கில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் 2024ம் ஆண்டு க.பொ.த சாதாரண மற்றும் உயர்தரத்தில் A தர சித்திகளைப் பெற்று பாடசாலைக்கு பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்த மாணவ, மாணவியரை கெளரவிக்கும் “ASSAD INSPIRE AWARDS-2025” மாபெரும் கௌரவிப்பு நிகழ்வு நேற்று மாலை அக்கரைப்பற்று பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அக்கரைப்பற்று அமைப்பாளரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் தலைமையில் இடம்பெற்ற இக் கெளரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.

மேலும், கெளரவ அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. அஸ்ரப் தாஹிர் கலந்து கொண்டதுடன் அக்கரைப்பற்று மற்றும் திருக்கோயில் வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.எம்.ஏ.ஜவாத், மாநகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பலரும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இதில் அக்கரைப்பற்று, திருக்கோவில் கல்வி வலயங்களை சேர்ந்த சுமார் 158 மாணவ, மாணவியர் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது டன், பணப் பரிசு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அத்தோடு மாணவர்களின் கரங்களினால் அவர்களின் பெற்றோர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் வாய்ப்பையும் இங்கு வழங்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :