6ஆம் தரம் முதல் பாலியல் கல்வி கற்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதோடு, தன்பால் உறவு மற்றும் பிறப்புக்கட்டுப்பாடு போன்ற விஷயங்களும் சேர்க்கப்படவுள்ளதான தகவல் கவலை அளிப்பதாக கட்சி தெரிவித்துள்ளது.
இத்தகைய நாகரிகமற்ற விஷயங்களை குழந்தைகளுக்குக் கற்பிப்பது கல்வி அல்ல, திசைதிருப்பும் செயல் எனவும், இத்தகைய விடயங்களை எடுத்துரைக்கும் பொறுப்பு பெற்றோர்களுக்கே உரியது எனவும் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஏற்கனவே பாடசாலைகளில் மாணவர்-ஆசிரியர் துஷ்பிரயோகங்கள் நடைபெறும் சூழலில், பாலியல் கல்வி அறிமுகம் புதிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும் கட்சி எச்சரித்துள்ளது.
“நம் நாட்டின் கலாசாரம், நாகரிகம், மதம் ஆகியவற்றை பாதுகாக்க தலைவர்கள் முன்வர வேண்டும். அமைச்சு அல்லது பிற அமைப்புகளின் விருப்பப்படி நாட்டின் மதிப்புகளை திசைதிருப்ப அனுமதிக்கக்கூடாது” என கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீத் முப்தி ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 comments :
Post a Comment