அறிவாற்றலில் மொழிவளர்ச்சியின் பங்களிப்பு
மொழியானது மனிதன் எப்போது இத்தரணியில் அவதரித்தானோ அன்று தொடக்கம் அவனோடு அவன் பேசுகின்ற மொழியும் அவனது வாழ்வில் இரண்டரக்கலந்தே வந்துள்ளது. எந்தவொரு விடயத்தையும் மற்றவருக்கு புரியவைப்பதற்கு மொழி இன்றியமையாததாகும். அந்தவகையில் மொழியின் முக்கியத்துவம் தனிமனித அபிவிருத்திக்கும் தன்சார்ந்த சமுதாயத்தினது அபிவிருத்திக்கும் மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் மொழியின் அவசியம் உணரப்பட்டுள்ள நிலையில் இன்றைய கல்வித்திட்டமும் மொழியின் விருத்திக்கு குந்தகம் விளைவிக்காது ஏனைய துறைகளின் மேம்பாட்டுக்கு மொழியின் அத்தியவசியம் உணரப்பட்டுள்ள நிலையில் அதனை செம்மையாக்கி சிறுவயதிலிருந்தே மொழியின் மீதான பற்றை ஊட்டவேண்டியது பெரியோர்களது கடமையாகும்.

தன்னுடைய கருத்தினை மற்றவருக்கும், மற்றவரின் கருத்தினை தானும் விளங்கிக்கொள்ளப் பயன்படுத்தும் ஊடகமாக தொழிற்படுகின்ற மொழியின் ஆற்றலானது இயற்கையாகவே குழந்தைப்பருவத்திலிருந்தே உருவாகின்ற ஒரு நிலைமைய காணலாம். வீட்டில் பெற்றோர்கள், குடும்பத்தவர்கள், அயலவர்கள் என பிள்ளையின் மொழியாற்றல் சற்று வளர்ச்சியடைந்து உரியவயதை அடைந்ததன் பின்னர் பாடசாலைக்கு செல்லும் காலமதில் அங்கு ஆசிரியரின் வழிகாட்டலுடன் நெறிப்படுத்தி வழிகாட்டுகின்றபோது அப்பிள்ளையானது மொழியின் மீது பற்றுற்று விரைவான விருத்தியினை பெற்றுவிடுகிறது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் சில மாணவர்கள் மீது ஆசிரியர் பாராமுகமாக இருப்பாரானால் மொழியின் ஆற்றல் மங்கிடும் நிலையைத் தோற்றுவிக்கிறது எனவும் கூறப்படுகிறது.

குழந்தைகள் முறையான பாடசாலைக்கு செல்லும் முன்னர் முறைசார பாடசாலையான முன்பள்ளிக்கு பெற்றோர்கள் அனுப்புகின்றனர். அவர்களை முன்பள்ளி ஆசிரியர்கள் அக்குழந்தைகளை பராமரிக்கின்ற போது அவர்கள் குழந்தையின் உளவியல் சார்ந்த அறிவினை பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் அவனது வளர்ச்சியும் சரியான முறையில் வளர்ச்சிபெறும். இவ்வாறான விடயங்களை அறிந்து ஆசிரியர்கள் தொழிற்படுகின்றபோது அவர்களது தொழிலுக்கு ஊக்கம் கிடைக்கும். பொதுவாக குழந்தையின் உடல், உளம், மனவெழுச்சி போன்றன பிறப்பிலிருந்தே துரிதமான முறையில் வளர்;ச்சி  அடைவதையும் காணலாம்.  எனவேதான் பிள்ளையின் அபிவிருத்திக்கு உதவுகின்ற மிக முக்கிய காரணியாக அமைவதுதான் மொழியாகும்.

குழந்தையானது மற்றவர்களால் கூறப்படுகின்ற கருத்துக்களை விளங்கும் பருவத்திற்கு வந்தவுடன் அப்பிள்ளை பல்வேறுபட்ட மொழிகளைக் கையாளுகின்ற திறனைப் பெறுகின்ற வரைக்கும் மொழி அபிவிருத்திச் செயற்பாடுகள் அப்பிள்ளையின் விருத்திக்கு மிக உதவுகின்ற ஆற்றலைப் பெறுகின்றது. இவ்வாறாக பிள்ளையின் வயது அதிகரிக்க அதிகரிக்க அவனது மொழியும் வளர்ச்சியடைந்தே செல்கிறது. ஆதலால்தான் அறிவும், மொழியும், விருத்தியில் ஒன்றிலொன்று தங்கியுள்ளது. எண்ணத்தில் மொழியும், nhழியில் எண்ணமும் இணைந்துள்ள நிலையில் மொழி ஒன்றில்லாமல் அங்கே சிந்திக்க முடியாது. எனவேதான் சிந்தனை என்கிற விடயமானது மொழியை வளம் பெறவைக்கிறது. மற்றவருடன் தொடர்புறவும், தேவைகளை நிறைவு செய்யவும் மொழி உதவுகிறது. அது சமுகமயமாக்களில் எண்ணப்பரிமாற்றம் ஏற்பட்டு ஒரு தெளிவை ஏற்படுத்துவதற்கு மொழி என்கிற அறிவாற்றல் அவசியமாகிறது.

பிள்ளை தாயின் வயிற்றில் இருக்கின்றவேளையில் கேட்ட ஒலிகளைப் போன்ற ஒலிகளை அப்பிஞ்சுக் காதுகளால் கேட்கும். தாயினது வாயிலிருந்து வருகின்ற சில ஒலிகளையும் வார்த்தைகளையும் இனங்காணவும் முடிகிறது. காலப்போக்கில் பிள்ளையின் அயற் சூழலிலிருந்து எழுகின்ற ஒலிகளைக் கேட்டு பின்னர் பிறித்தறிந்து கொள்கிறது. இவ்வாறு கருத்துள்ள ஒரு சொல்லை விளங்கிக் கொள்ளக்கூடிய வகையில் இச் செயற்பாடானது படிப்படியாக நடைபெற்று பின்னர் ஓசைகளை உச்சரிக்கின்ற உறுப்புக்களின் வளர்ச்சியானது படிமுறையாக அமைவதுடன் ஏனைய உறுப்புக்களினதும் தொழிற்பாடுளும் இதனைப் போன்றே வளர்ச்சியடைகிறது. இதுவும் குழந்தைகளின் மொழி வளர்ச்சிக்கு உதவிநிற்கின்றது. மொழித்திறன் விருத்திக்கு உதவிடும் நான்கு விடயங்கள் கேட்டல், பேசுதல், வாசித்;தல், எழுதுதல் என்பனவாகும்.

Nfl;ly; mjhtJ nrtpLj;jy;(Listening) என்கின்றபோது மொழியின் அடிப்படைத் திறன்களில் இது  முதன்மையானதாகும். 'ஒலியைக் காது ஏற்கும் செயல் செவிமடுத்தல்' எனப்படும். கல்விச் செயற்பாட்டில் செவிமடுத்தல் என்பது மிகவும் பரந்துபட்ட பொருளைக் கொண்டிருந்தாலும் வெளிப்படுகின்ற பல்வேறு ஒலிகளையும் செவி அதனை ஏற்று அவற்றிக்குரிய பொருளை உணர்த்துவதும் செவிமடுத்தலாகும். மொழியைக் கற்பதற்கான முதல்வழி செவியாகும். அதன் வழியேதான் கற்றலில் பெரும்பகுதி நடைபெறுகின்றது. குழந்தையின் செவிமடுக்கும் ஆற்றலைப் பொருத்துத்தான் மொழியைப் பேசுகின்ற அளவும் திறனும் அமைகின்றன. என்கின்றனர் ஆய்வாளர்கள்.

NgRjy; (Speaking)அதாவது 'செவிமடுத்தலின் விளைவால் உருவாகின்ற திறனாக பேசுதல் அமைகிறது' பேசுதல்திறன் மற்றும் பேச்சுத்திறன் ஆகிய இரு அம்சங்கள் இங்கு காணப்படுகின்றன. பேசுதலானது தகவல் பரிமாற்றத்தையும், நம்முன்னே உள்ளோரை கவரும் வகையில் கரத்துக்களை வெளிப்படுத்தி பேசுதலானது பேச்சுத்திறன் எனலாம். பிள்ளையின் ஆரம்ப கட்டங்களில் மொழிக்கல்வியில் கருதப்படுகின்ற பேசுதல் திறனாகக் கொள்ளப்படுவதுடன், பிள்ளை பேசுதலை மேற்கொள்ள  உருவாக்கப்படும் சூழல்கள் அனைத்தும் பேசுதல் திறனை வளர்க்கும் செயற்பாடாகவே கருதப்படுகின்றது.

thrpj;jy; (Reading)வாசித்தலின் தொடக்கமாக எழுத்துக்களைக் காணும் நிலையாகும். மூளை அறிந்து பொருளுணரும்போது வாசித்தல் நிகழ்கிறது. இரண்டுவகையான உளவியற் செயற்பாடுகள் இங்கு நடைபெறுகின்றன. ஒன்று மூளை கண்ணுக்குச் செல்லுதல். இரண்டாவது கண் மூளைக்குச் செல்லுதலாகும். வரிவடிவத்திலுள்ள சொற்களை ஒலிவடிவமாக மாற்றி உச்சரித்தல், உறுப்புக்களும் சொற்களை நோக்குகின்ற கண்ணும் ஒத்துழைக்கின்றபோதுதான் வாசித்தலானது சரியாக நடைபெறும். எனவேதான் வாசித்தலில் சொற்களை இனங்காணுதல், உச்சரித்துப் பொருளுணர்தல் போன்றவைகள் நடைபெறுவதற்கு உள்ளம், கண், காது, மூக்கு, நா, குரல் போன்ற உறுப்புக்கள் அனைத்தும் ஒத்துழைக்க வேண்டியநிலையானது வாசிப்புக்கு மாத்திரமே உள்ளது.

மேலும், எழுத்துக் குறியீடுகள் ஒலி;க்குறியீடுகளாக மாற்றப்படுகின்ற சந்தர்ப்பம் வாசித்தலுக்கு உண்டு. வாசித்தலின்போது வாசிப்பவர் மனதுக்குள்ளிருந்து ஒருவர் பேசுவதைப் போன்ற உணர்வை ஏற்படுகின்றது. ஒலிவடிவங்களாக வெளிப்படுத்தும் செயற்பாடு மாத்திரம் வாசித்தலாகாது. வாசிக்கும் பொருளையும் பொருளுணர்தலோடு இணைந்தவகையில் வாசிப்பதே வாசித்தல் ஆகும். எழுத்துக்களாலான சொற்கள், சொற்களாலான வாக்கியங்கள் ஆகியன வாசிக்கும் போது பொருளுணர்த்தும் மொழிக்கூறுகளாகும். எனவேதான் எழுத்து, சொல், வாக்கியம் ஆகியன மொழிப் பண்பாட்டுத்திறன் வாசித்தலுக்கு முக்கியமாகும்.

vOJjy; (Writing) இத்திறனானது மொழிவிருத்திக்கு ஆதாரமளிக்கிறது. முன்வாசிப்பானது வாசிக்கும் விருத்தியை வளர்ப்பது போல் முன்எழுத்துப் பயிற்சிகளும் எழுத்துவிருத்தியை வளர்த்துவிட உதவுகிறது. கை, கண் ஆகியனவற்றின் இணைப்புத்தான் எழுத்துத்திறனது வளர்ச்சிக்கு உதவுகிறது. எழுதுதல்திறன் எழுத்துத் திறனிலிருந்து வேறுபட்டுக் காணப்படுகிறது. மொழியைக் கற்கின்றபோது அதிலுள்ள எழுத்துக்களையும் சொற்களையும் வாக்கியங்களையும் முறையாக எழுதும் அளவிலேயே எழுதுதல் திறன் நிறைவடைகின்றது. எழுத்துத்;திறனானது மொழியின் வழியாக கருத்துக்களை வல்லமையுடன் வெளியிடும் திறனைக் கொண்டதாகும்.

பொதுவாக செவிமடுத்தல், பேசுதல், வாசித்தல் ஆகிய திறன்களைப் பெறுவதற்கு பாடசாலை தவிர்ந்த ஏனைய பிறச் சூழல்களும் உதவும். ஆனால் எழுதுதல்திறன் வளர்ச்சிக்குப் பாடசாலையும் ஆசிரியர்களும் முக்கிய பொறுப்பாளர்களாக காணப்படுகின்றனர். எதை எழுதுகின்றார்கள் எனக்குறிப்பது எழுதுதல் திறனாகாது. எப்படி எழுதுகின்றார்கள் என்பதே எழுதுதல் திறனோடு தொடர்புடையதாகும். எனவேதான் அடிப்படையான மொழித்தித் திறன்களை வளர்ப்பதில் ஆரம்பப்பள்ளிகள் முக்கியத்துவமிக்கதாக காணப்படும். பிள்ளைகள் முன்பள்ளியில் பயிலும் காலத்தில் இதனை நினைவிற் கொண்டு முன்பள்ளி ஆசிரியர்கள் முன்பள்ளிக் கல்;விக்குப் பொருத்தமுடையனவாகக் காட்சி நினைவும, கை கண் இணைப்பு, கால அவகாசம் ஆகியன தொடர்புபடுத்துதல் வேண்டும். நூல் கோர்த்தல், கடதாசியை வெட்டி ஒட்டுதல், கிறுக்கலும் வரைதலும் போன்றவற்றை மீண்டும் மீண்டும் கொடுத்து அழுத்த வேண்டிய செயற்பாடுகளாகும். பிள்ளைகள் ஆர்வம் காட்டத்;;;;;;;; தொடங்கியதும் இலகுவான சொற்களஞ்சியங்களை எழுதுவதற்கு ஊக்குவிக்கலாம்.

எனவே இவையாவும் ஒன்றோடொன்று தொடர்புடையனவாகவே காணப்படுகின்றது. இத்திறன்களின் அபிவிருத்தியை தீமை பயக்கும் மனவெழுச்சிகள் குழப்பி மழுங்கடித்துவிடும். ஆசிரியர்களும், பெற்றோர்களும சமநிலையான மனவெழுச்சிகளை உருவாக்கவும், அவற்றைக் கூறவும், போதியளவு வாய்ப்புக்களை வழங்கவும் வேண்டும். பொறுமையுடன்கூடிய அன்புடன் அவர்களை நேசிக்கவும் வேண்டும். சிறார்களோடு அன்பாக அளவளாகின்றபோது அவர்கள் கேட்கவும், கதைக்கவும், உதவலாம். பொருத்தமான சூழலை அமைத்து கற்றல் செயற்பாடுகளை வழங்குவதற்கு இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கேட்கின்ற திறனைப் பெற்றுக் கொள்கின்ற பிள்ளை தொடர்ந்து பேசவும், படிப்படியாக வாசிக்கவும், எழுதவும் திறனைப் பெற்றுவிடும்.

இவ்வாறாக மொழிவிருத்தி உதவும் வகையில் மொழிவளமுடைய சூழலில் பிள்ளைகள் வாழவேண்டும். வளர்ந்தோரும், சிறார்களும் பலதேவைகளுக்கும் மொழியைப் பயன்படுத்த வேண்டும். மொழியை வேண்டிய வடிவங்களில் பயன்படுத்;த ஊக்கமூட்ட வேண்டும். கேள்விகள் கேட்கவும், பேசவும், கலந்துரையாடவும், வர்ணிக்கவும் வாய்ப்பளிக்க வேண்டும். தமது மொழியினை மதிப்பிடவும், பிறர் பேசும் மொழியின் தரத்தை அறிந்து மதிப்பிடவும் சந்தர்ப்பம் வழங்குதல் வேண்டும். தங்களது நம்பிக்கையையும், ஆற்றலையும் ஆர்வமுடன் கற்றலில் ஈடுபடவும், குதூகலித்துக் கும்மாளவிட்டு சிரித்து மகிழவும், புதுச் சொற்களை ஆக்கவும் வேண்டும். சிறார்கள் தங்களது அனுபவங்களைச் சொல்லவும், என்ன சொல்லப் போகின்றோம், என்ன செய்கின்றோம் என்பதைக் கதைக்கவும் சந்தர்ப்பம் அளிக்கவும், அவர்கள் பேசுவதை யாராவது கேட்கச் செய்யவும், என்ன சொல்கிறார்கள் என்பதைப் பொறுமையோடு கேட்டு அதற்கேற்பப் செயற்பட்டு அவர்களை ஊக்குவிக்க வேண்டும். இதற்கு உதவுக்கரம் நீட்டுவது பெற்றோர் ஆசிரியர்களினதும் கடமையாகும்.எஸ். எல். மன்சூர் (கல்விமாணி),
அட்டாளைச்சேனை


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :